செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் மாற்றம ஏற்படுத்தப்பட மாட்டாது
தவணைக் காலத்தைத் தவிர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் வேறு எந்த மாற்றங்களும் தற்போதைக்கு ஏற்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் தவணைக்காலத்தை நீடிப்பது குறித்த யோசனைத் திட்டம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகளிடம் வரைவு யோசனைத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், புதிய யோசனைத் திட்டம் தொடர்பில் செயற்குழுவின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 17 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக