புதன், 25 ஆகஸ்ட், 2010

300க்கும் மேற்பட்ட ஆடுகளும் கோழிகளும் பலி கொடுக்கப்படவுள்ளன.


முன்னேஸ்வரம் காளி கோயில் வழமைப்போல சுமார் 300க்கும் மேற்பட்ட ஆடுகளும் கோழிகளும் அடியார்களால் பலி கொடுக்கப்படவுள்ளன.
எனினும் இந்த முறை அதற்கு ஆட்சேபம் தெரிவித்து பௌத்த பிக்குமார்கள் சிலர் நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற அடிப்படையில் அங்கு மிருகங்கள் பலிகொடுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக மிருகங்களின் உயிர்களை பலிகொடுப்பதில் தவறு இல்லை எனவும் பக்தர்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வருடாந்த நிகழ்வே இது எனவும் அந்த ஆலயத்தின் பூசகர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: