புதன், 25 ஆகஸ்ட், 2010

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!

ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைதான சாய்ராபானு மற்றும் ஜோதி ஆகியோரை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஆந்திர அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்ததால், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகைகள் சைராபானு, ஜோதி சமீபத்தில் ரிலீசான பொம்மரிலு, கிக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.

இருவரையும் விபசார வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர். ஹைதராபாத் நகர் குந்தன்பாக் பகுதியில் அமைச்சர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அபார்ட்மென்டில் விபசாரம் செய்ததாக இவர்கள் பிடிபட்டனர்.

இவர்களுடன் ரஷ்ய பெண் ஒருவரும் கைதானார். விபசார விடுதியை சினிமா தயாரிப்பாளர் ஜுவ்வல ராஜு என்பவர் நடத்தி வந்ததாக விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

சைராபானுவும், ஜோதியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கக் கூடாது என்று போலீசாருக்கு பல அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

வெளியில் வந்த நடிகைகள் இருவரும் தங்களை விபசார வழக்கில் கைது செய்தது திட்டமிட்ட சதி என்று இருவரும் தெரிவித்தனர்.

இதுகுறித்து சாய்ரா பானு கூறுகையில், "நான் குற்றவாளி இல்லை. பாதிக்கப்பட்டவள். சதி செய்து என்னை இந்த விபசார வழக்கில் சிக்க வைத்து விட்டார்கள்.

சந்து என்பவர் எனக்கு சினிமா வாய்ப்புகள் பிடித்து தருவதாக கூறி வந்தார். நேற்று திடீரென்று போன் செய்து ஒரு சினிமா சான்ஸ் வந்திருக்கு. உடனே புறப்பட்டு வா என்றார். தயாரிப்பாளர் உனக்காக காத்து இருக்கிறார் என்றார். காரும் அனுப்பி வைத்தார். அவரை நம்பி போய் மாட்டிக்கொண்டேன்...," என்றார்.

மற்றொரு நடிகை ஜோதி கூறுகையில், "சந்து என்பவர் விபசார புரோக்கர் என்பது ஏற்கனவே தெரியும். ஆனாலும் சினிமா வாய்ப்பு பிடித்து தருபவர் என்று கூறியதால் நம்பி போனேன். அங்கு விபசார வழக்கில் சிக்க வைத்து விட்டார். திட்டமிட்டு சதி செய்து மாட்டி விட்டு விட்டனர்," என்றார்.

சைராபானு ஏற்கனவே போதை பொருள் வழக்கில் தொடர்பு உள்ளவர். ரவி தேஜாவின் சகோதரர்கள் கைதானபோது இவரையும் பிடிக்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி...

கைதான இந்த இரண்டு நடிகைகளையும் உடனே விடுவிக்க கோரி அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்தார்களாம். இதையடுத்து ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: