உலக தரப்பபட்டியலில் எப்போதும் முதலிடம் பிடித்து வரும் வீரர் இந்தியரா என்ற புதிய பிரச்சனை தற்போது. ஐதராபாத் பல்கலை.,யில் சர்வதேச கணிதவியல் பேராசிரியர் மன்றம் சார்பில் நிகழ்ச்சி இன்று காலையில் நடக்கவிருந்தது. இந்த விழாவில் ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவிருப்பதாக பல்கலை., அறிவித்திருந்தது. இதற்கென ஆனந்தும் , அவரது மனைவியும் ஐதராபாத் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலை., அறிவித்துள்ளது. இதில் ஆனந்த் ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை பெற்று இருப்பதால் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் எதுவும் சட்டச்சிக்கல் இருக்கிறதா என சந்தேகம் எழுந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை மனிதவள அமைச்சகம் எழுப்பியதாகவும் தெரிகிறது. இதனால் பல்கலை., யினர் குழப்பம் அடைந்ததாக தெரிகிறது.
இதனால் வெறுத்துப்போன ஆனந்த் நான் இந்த பட்டத்தை வாங்கப்போதில்லை, எனக்கு வேண்டாம் என கூறியுள்ளார்.
ஆனந்துடன் கபில்சிபல் தொடர்பு : இதனையடுத்து மத்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல் விஸ்வநாதன் ஆனந்திடம் போனில் பேசினார். டாக்டர் பட்டம் வழங்கிட தாம் ஆவண செய்வதாகவும் கூறியுள்ளார். விழாவை புறக்கணிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆனந்த் நாட்டுக்கு பெருமை தேடித்தந்தவர் என்றும், இவரிடம் தமது அமைச்சகம் தவறு எதுவும் இழைத்திருந்தால் தான் அதற்கு பொறுப்பேற்பதாகவும், மனம் வருந்துவதாகவும் கபில்சிபல் கூறியுள்ளார்.
டாக்டர் பட்டம் வழங்கிட நாங்கள் மறுக்கவில்லை என்றும் சிறிது காலம் தாழ்ந்து விட்டது என்றும் , இன்று இரவில் விழாவை நடத்திட தயாராக இருப்பதாகவும் கணிதவியல் மன்ற தலைவர் ரஜத்டாண்டன் கூறியுள்ளார்.
வி.தில்லை நாதன் - பஹ்ரைன்(திருப்பாளைக்குடி),இந்தியா
2010-08-24 17:25:48 IST
அங்காடியில் வாங்குவது அல்ல டாக்டர் பட்டம், தகுதியானவர்களால் முறைபடி தேர்தெடுத்த பின்பே அறிவித்திருக்கவேண்டும்.நீங்கள் எத்தனைமுறை மன்னிப்பு கூறினாலும் ஏற்றுகொள்ளமுடியது,,,...
shiva - tirupur,இந்தியா
2010-08-24 17:20:58 IST
கலை கூத்தாடிகளுக்கு, சுயநலவாதிகளுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க எல்லா பல்கலைகலகங்களும் போட்டி போட்டு கொடுக்க அலைகிறார்கள். இந்த டாக்டர் பட்டமும் அந்த university பெருமை படுவதற்கு அறிவித்திருக்கிறார்கள். ஆனந்த் திற்கு இதைவிட உலக சாம்பியன் தகுதி உள்ளது. ஆனந்த் இதை மறுத்தது சரி. வாழ்க. சிவா திருப்பூர்....
சிவா - சிங்கபோரே,சிங்கப்பூர்
2010-08-24 17:17:33 IST
என்னங்கடா இது உலகம், ஒருத்தன் தன் முயற்சியில் சாதனைகளைச் செய்தால் அவனது தேசாபிமானத்தையோ இந்த தேசத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்று சந்தேகிப்பதும், அதுவே வெளிநாட்டவருக்கு பாரத ரத்னா முதலான அங்கீகாரத்தைச் செய்வதும் - ச்சே: என்ன கேவலமான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். வெளிநாட்டவர் இங்கு வந்து என்ன அட்டுழியம் செய்தாலும் அவருக்கு விடுதலையும் பொது மன்னிப்பும் இந்த கேவலமான தேசத்தில் தான் கிடைக்கும்....
கிருஷ்ணகுமார் - Trichy,இந்தியா
2010-08-24 17:13:29 IST
செஸ் என்பது தனிநபர் விளையாட்டு. தேசியம் என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஆனந்த்க்கு டாக்டர் பட்டம் என்பது அவரது திறமைக்கு வழங்கப்படுவதே ஒழிய நாட்டிற்கு அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ளவும்....
ஹரிஹரன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-24 17:12:59 IST
he won (own) our hearts, this doctrate will not make much difference for anand....
கண்ணன் - சென்னை,இந்தியா
2010-08-24 17:10:47 IST
மிஸ்டர் ஆனந்த் செய்தது சரியே. மனிதனை மதிக்க தெரியாத மனிதர்களிடம் டாக்டர் பட்டம் பெறுவதை விட மனிதனாகவே இருக்கலாம். எந்த ஒரு நல்ல மனிதனும் இதை தவறென்று சொல்ல மாட்டான்...
RAJARAM - DUBAI,இந்தியா
2010-08-24 17:04:53 IST
KALMADI TAKES INDIANS PRIDE TO THE WORLD THROUGH CWG SCANDAL. WHAT ELSE MORE REQUIRED. ANAND IS A CLASS - 1 PLAYER OF INDIA ,, IMAGINE THE STATUS OF OTHER PLAYERS. WHY INDIAN GOVERNMENT OFFERED MANY AWARDS TO ANAND. DONT THE HRD MINISTRY HAS BRAIN TO ASK SUCH QUESTIONS. HRD MINSITRY OF A COUNTRY IS LIKE THIS. THEY HAVE TO HAVE A BEST PEOPLE IN THEIR DEPARTMENT FOR THHE WHOLE COUNTRY. SHAME TO CONGERSS GOVERNMENT...
RAMARAO - KualaLumpur,மலேஷியா
2010-08-24 17:01:56 IST
ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம். எனது குருவான விஸ்வநாதனே இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இரா. இராமராவ், மலேசியா...
கே.rajaram - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-24 16:51:20 IST
the hrd minsitry doest not aware when he was annonced as a contingent for commonwealth games .congress government is total waste to india. they want only minority vote ....
வாசு - சென்னை,இந்தியா
2010-08-24 16:45:38 IST
எழுத படிக்காதவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கும் கேடு கேட்ட அரசு பல்கலைக்கழகங்கள், விஸ்வநாதனை அசிங்கப்படுத்துகிறது.....
கிருஷ்ணா - பெங்களூர்,இந்தியா
2010-08-24 16:43:55 IST
முட்டாள்கள், அரசியல்வாதிகள் என்றால் கேள்வி கேட்க மாட்டார்கள்..ஆனந்த் இதை நிராகரிப்பது சரியே...
ஆரிப் அத்தியந்தல் - சென்னை,இந்தியா
2010-08-24 16:38:20 IST
இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா...
இளையராஜா வே - Chennai,இந்தியா
2010-08-24 16:37:31 IST
இவ்விருதை ஆனந்த் புறக்கணிக்க வேண்டும். நமது நாட்டில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டு வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. அனைத்திலும் அரசியல், ஊழல். என்று தான் இந்தியா முன்னேருமோ...வாழ்க வளர்க...
praveen - dindugul,இந்தியா
2010-08-24 16:30:26 IST
விசுவநாதன் ஆனந்த் இந்தியன் தான் அதில் entha சந்தேகமும் தேவை இல்லை....
ஜ. ஸ்ரீனிவாச ரங்கன் - Dubai,இந்தியா
2010-08-24 16:27:00 IST
ஆனந்தின் அருமை தெரியாதவர்கள் இவர்கள்.ஆனந்த் செய்தது சரியே. பட்டத்தை அவர் வாங்க வேண்டாம்....
தமிழன் - USA,யூ.எஸ்.ஏ
2010-08-24 16:26:53 IST
இப்போ தெரியுதா உள்நாட்டில் யாருக்கும் மரியாதை குடுக்க தெரியாது. எல்லாரும் வெளிநாடு போகிற காரணம் தெரியுதா?...
கணேசன் - coimbatore,இந்தியா
2010-08-24 16:22:55 IST
ஆனந்த் பட்டம் வெல்லும் போது இல்லாத சந்தேகம் இப்பொழுது எப்படி இவர்களுக்கு வந்தது. நம் நாட்டில் விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கபடுவது புதிதல்ல. பல்கலை நிர்வாகம் பட்டம் வழங்குவது சம்பந்தமாக ஆனந்திடம் பேசுவதற்கு முன்பே ஆராய்ந்திருக்க வேண்டும்.இது ஆனந்தை மட்டும் அல்ல இந்தியர் அனைவரையும் அவமதிப்பதாகும். இந்தியர்கள் எவ்வளவோ பேருக்கு வெளி நாட்டு பல்கலை கழகங்கள் பட்டம் வழங்கயுள்ளன. நாகரிகம் தெரியாத பல்கலை கழகம். நிச்சயம் ஆனந்த் இந்த பட்டத்தை புறக்கணிக்க வேண்டும்....
T .சுந்தர் ராமன் - புழுதிவாக்கம்chennai,இந்தியா
2010-08-24 16:14:17 IST
திரு ஆனந்த ஒரு பேட்டியில் தான் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கு கொள்ளுவதற்கு வசதியாக இருப்பதால் ஸ்பெயினில் தங்கி இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் இந்தியன் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை....
gopal - chennai,இந்தியா
2010-08-24 16:10:46 IST
This is very poor.Indian politicians and university does not know how to respect an INDIAN. Truely we have to doubt whether INDIA is only for Indians or already soldout to foreigners by POLITICIANS. Mr.Anand shouldn,t accept this degree.Its a disgrace for him....
கே.திருமலைராஜன் - Rajakilpakkam,இந்தியா
2010-08-24 16:07:45 IST
உலக சாம்பியனாக இருக்கும் இந்தியரான விஸ்வநாதனுக்கு,குடியுரிமைப் பிரச்சினை காரணமாக 'டாக்டர்' பட்டம் மறுக்கப்பட்டிருப்பது,அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் பதவியே அளிக்க முன் வருபவர்கள், நம் நாட்டு மனிதருக்கு, அதுவும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மனிதருக்கு பட்டம் அளிக்க மறுப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது.தமிழக முதல்வர் தலையிட்டு உடனே நடந்த தவறுக்கு பரிகாரம் காண வேண்டும்.ஏன் எனில் விசுவநாதன் ஒரு தமிழரும் கூட!...
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-24 16:04:03 IST
மிஸ்டர் ஆனந்த் தயவுசெய்து இந்த டாக்டர் பட்டத்தை ஏற்றுகொள்ளாதீர்கள்!! உங்களை அவமானப்படுத்திய நாசகார பாவிகளின் கரங்களிலிருந்து தயவுசெய்து இந்த கேவலமான பட்டத்தை பெறாதீர்கள். அதற்காக அலைபவர்களுக்குத்தான் லாயக்கு. நாட்டுக்கு பெருமை சேர்த்த உங்களை போன்றோருக்கு இந்த பட்டங்களுக்குத்தான் பெருமையாகும்..வேண்டாம் வாங்காதீர்கள்.....
சிவகுமார் - மதுரை,இந்தியா
2010-08-24 15:58:34 IST
ஆனந்த் இந்தியர் அல்ல. அவர் ஸ்பெயின் நாட்டுக்காரர் தான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக