அக்கா.. எழுந்திருக்கா.. மணி ஆறு.. வாக்கிங் போக டைம் ஆயிடுச்சி.. கொடநாடு கிளைமேட் சூப்பரா இருக்கு..வாக்கிங் முடிச்சி வந்து மறுபடியும் தூங்கலாம்..
*நமக்கு வர்ற கூட்டத்தைப் பார்த்து அறிவாலயம் கலகலக்குதா? அடுத்த கூட்டம் நெல்லையில.. அங்கே அஞ்சு லட்சம் பேர் வரணும்.. எங்கேயிருந்து பிடிச்சிக்கிட்டு வருவீங்கன்னு தெரியாது.. கூட்டம் வரலைன்னா தொலைஞ்சீங்க..
*அடுத்த சி.எம். நீங்கதாம்மா.. பொதுக்கூட்ட மேடையை கிழக்குப் பக்கமா பார்த்துப் போடுங்க.. பேசுறதுக்கு முன்னாடி மைக்குக்கு எலுமிச்சை சுத்திப் போடுங்க..கட்சித்தலைவர்கள் பழநி முருகனுக்கு காவடி எடுத்து மண்சோறும் சாப்பிடணும்..அசுவமேத யாகம் பண்ணியே ஆகணும்..
*காங்கிரஸ்காரா அவாளைக் கழட்டி விடுற மூடுலதான் இருக்கா..கேப்டனை இழுத்து கூட்டணியில போடுங்கோ.. அப்புறம் வழக்கம் போல எட்டி உதைச்சிடலாம்..மணல் கொள்ளை கேஸ் போடப் போறேன்..ராகுலை நான் கரெக்ட் பண்ணிக்கிறேன்..
*அம்மா உங்களை சென்னைக்கு வரச்சொல்லி தி.மு.க.காரங்க தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் பண்றாங்கம்மா.. கொடநாட்டு கும்பகர்ணின்னு உங்களுக்கு பட்டம் கொடுத்திருக்காங்களாம்..
*இதைக் கேட்கத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா? ஏன் வாய்தா வாங்கத் தெரியாதா? என்ன வக்கீல் நீங்க?
* அடுத்த வாரம் மொத்தம் ஏழு வழக்கு கோர்ட்டுக்கு வருது..என்னம்மா செய்யலாம்?
* அக்கா.. கலைஞர் டி.வி.யில் வேணுமின்னே வைரம் படத்தைப் போடுறாங்க.. உன் இமேஜைக் காலி பண்ண கருணாநிதி ப்ளான்.. ‘உன் வயசு என்ன’ என் வயசு என்ன? வாழ்த்த வயதில்லை என்றாலும் உன் வாய்த்துடுக்கை நிறுத்திடுக.. இல்லையேல் வெளிவரும் பல ரகசியங்கள்’னு முரசொலியில மிரட்டியிருக்காரு..
* அக்கா ரெண்டு நாளா வெளியே திண்ணையில சோறு தண்ணி சாப்பிடாம வைகோ, ராமதாஸ், தா.பா இவங்களெல்லாம் வெயிட் பண்றாங்க.. கூர்க்காவை விட்டு விரட்டினாலும் கலங்காம அங்கேயே இருக்காங்க.. பாவமா இருக்கு..
* இந்த விஜயகாந்தை விட்டுடக்கூடாது.. தலைஎழுத்து..வெங்கடேஷை விட்டுப் பேசச் சொல்லு..வாசல்ல வெயிட் பண்றவங்களுக்கு பாய் தலைகாணி கொடுத்து அங்கேயே ஒரு பத்து நாள் இருக்கச் சொல்லு..சோனியாவோட பழைய ஹிஸ்டரியெல்லாம் கலெக்ட் பண்ணு..அடுத்த மீட்டிங்ல கிழிச்சிடறேன்.. குட் நைட்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக