ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நிருபமா ராவை சந்திக்கும்

இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவை தமிழ் கட்சிகளின் அரங்கம் சந்திக்கவுள்ளது.
இலங்கை வரும் நிருபமா ராவ் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை தங்கியிருந்து, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக ஆராயவுள்ளார்.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் நிருபமா ராவை சந்தித்து மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிருபமா ராவை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: