![]() |
![]() |
![]() |
ராதா மனோகர் : நடிகர் விஜயின் பின்னால் தன்னை மறந்து ஒரு கூட்டம் உருவாகி இருப்பது வெறும் தற்செயலான நிகழ்வல்ல.
மக்களை அரசியல் பொதுவெளியில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை பலரும் திட்டமிட்டு செய்ததன் விளைவுதான் இது என்று தோன்றுகிறது.
ஒரு நூற்றாண்டாக எத்தனையோ சமூக அரசியல் பொருளாதார சிக்கல்களை தமிழகம் சந்தித்திருக்கிறது.
அவற்றில் ஏராளமான விமர்சனங்கள் உண்டு.
அவை நேற்றும் உண்டு இன்றும் உண்டு நாளையும் உண்டு.
எல்லா பிரச்சனைகளுக்கும் ஏதோவொரு அடிப்படை காரணம் இருக்கும் .
அவை பல வேளைகளில் நியாயமாக கூட இருக்கும்.
நாம் என்னதான் கருத்துவேறுபாடுகள் கொண்டிருந்தாலும்,
எவ்வளவுதான் முரண்பாடுகள் கோபங்கள் வேதனைகள் சண்டைகள் இருந்தாலும்,
ஏதோவொரு கட்டத்தில் கருத்துக்களின் அடிப்படையில் தீர்வுகளை தமிழகம் கண்டிருக்கிறது.
இந்திய துணைக்கண்டத்தின் பல சமூக விழிப்புணர்ச்சியை தமிழகம்தான் தொடக்கி வைத்திருக்கிறது.
மொழி உரிமை மாநில அரசியல் உரிமை பெண் உரிமை போன்றவற்றில் தமிழகம்தான் எப்போதும் முன்னணியில் இருக்கிறது!
சமூக நீதி அரசியலில், குறிப்பாக சுயமரியாதை கோட்பாட்டை உயர்த்தி பிடித்து ஜாதி மத அரசியலுக்கு வேட்டுவைக்கும் புரட்சியை தொடக்கி வைத்தது தமிழ்நாடுதான்! .
இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் அதிசயத்தோடு மட்டுமல்ல கொஞ்சம் பொறாமையோடு கூட பார்க்கும் ஒரு நிலையை தமிழகம் எட்டி இருக்கிறது.
![]() |
இந்த நிலை ஒரே நாளில் ஏற்பட்டு விடவில்லை,
எத்தனையோ சிந்தனைவாதிகளின் கண்ணீரும் செந்நீரும் தமிழக மண்ணில் சிந்தப்பட்டிருக்கிறது
இன்றைய தமிழகத்தின் பிரமாண்ட வளர்ச்சியின் பின்னால் பல மேதைகளின் ஓயாத உழைப்பு இருக்கிறது.
பல தன்னலமற்ற மனிதர்களின் கடும் போராட்ட வரலாறு இருக்கிறது.
ஒரு பிளேன் டீ கூட வாங்க பணமில்லாவிடினும் கொண்ட கொள்கைக்காக தெருவெல்லாம் கூவிய மனிதர்களின் வரலாறு கொண்டது தமிழகம்!
தமிழகத்தின் மிக சாதாரண மக்கள் கூட அன்று ஓரளவு அரசியல் மயப்பட்டிருந்தார்கள்.
பாரதிதாசன் பாடியது போல கங்கை போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் தமிழர்களுடையது.
இப்படிப்பட்ட பெருமை மிக வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் தமிழ்நாட்டு மக்கள்.
ஆனால் இன்று கருத்தியல் ரீதியில் கொஞ்சம் தூங்கி விட்டார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
இந்த இடைவெளியில் ஒன்றுக்கும் உதவாத ஒரு சங்கிக்கும்பல் ஆளுக்கு ஒரு கும்பலை சேர்த்து கொண்டு தமிழ்நாட்டை வென்றுவிட துடிக்கிறது.
எந்தவித கொள்கை கோட்பாடோ செயல் திட்டமோ இல்லாத ஒரு உன்மத்தர் கூட்டத்தை உருவாக்க முடிகிறது என்றால் எங்கு தவறு நேர்ந்திருக்கிறது?
தமிழகம் சுயமரியாதை கோட்பாட்டை துணைக்கண்டத்திற்கே சொல்லி கொடுத்த மாநிலம்!
இன்று மீண்டும் நாம் சுயமரியாதை பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது!
மீள் பதிவு
ஒரு கல்ட் நிறுவனருக்கு இருக்க கூடிய அத்தனை குணங்களும் நடிகன் விஜய்க்கு இருக்கிறது!
முதல் குணம் வடித்தெடுத்த சுயநலம்
இரண்டாவது மிகவும் பயந்த சுபாவம்
இந்த கல்ட் ஆசாமிகள் தங்கள் பயத்தை மறைப்பதற்காக எல்லா விதமான வேஷங்களையும் போடுவார்கள்
எப்போதும் சக மனிதர்களிடம் இருந்து கவனமாக ஒதுங்கியே வாழ்வார்கள்.
இவர்களின் வாயில் இருந்து ஒரு போதும் உருப்படியான எந்த கருத்தும் வெளிவராது
எப்போதும் தன் தகுதிக்கு மிஞ்சிய அதீத கனவுலகில் மிதப்பார்கள்
உள்ளூர அளவு கடந்த ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்.
அதன் காரணமாகவே மக்களின் அங்கீகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்
இவர்களை சுற்றி எப்போதும் இவர்களை போற்றி புகழ்பவர்களே இருப்பார்கள்.
தாழ்வு மனப்பான்மை காரணமாக புகழ யாரும் இல்லையென்றால் வாடிப்போய்விடுவார்கள்.
மனதின் ஆழத்தில் உறங்கி கிடக்கும் உணர்வுகளை நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கூட எந்த காலத்திலும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
எப்போதும் ஒரு போலியான மென்மையான இறுகிய முகத்தோடுதான் காட்சி அளிப்பார்கள்
இவர்களின் சொந்த வாழ்வு எப்போதும் ஒரு ரகசிய இருட்டில்தான் இருக்கும்.
ஏறக்குறைய எல்லா கல்ட் நிறுவனர்களுக்கு உரிய பொதுவான குணாம்சம் இவையாகும் .
இந்த அளவு கோல்கொண்டு உங்கள் மனதில் தோன்றும் அத்தனை கல்ட் சந்தேக நபர்களையும் கண்முன்னே கொஞ்சம் நிறுத்தி பாருங்கள்!
நடிகன் விஜய்க்கு மட்டுமல்ல இன்னும் பல குரூர கல்ட்டு போண்டாக்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்
![]() |





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக