Kathiravan Rathinavel : தந்த டீவி - News templates with time
Date: 27.09.2025
07.45 PM - மாஸ் entry கொடுத்த விஜய்
07.49 PM - தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கம், பேச்சை நிறுத்திய விஜய்
07.58 PM - யாரும் எதிர்பாராத பேரதர்ச்சி, குவியும் ஆம்புலன்ஸ்கள்
08.13 PM - கைமீறிய நிலை? துடிக்கும் உயிர்கள்?
08.15 PM - மூச்சுத்திணறலால் 30 க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
08.20 PM - முதல்வர் போட்ட உத்தரவு
08.24 PM - துடிக்கும் உயிர்கள்.. நிலவரம் சொல்லும்போதே நடுங்கிய ரிப்போர்ட்டர்
08.30 PM - விஜய் பிரசாரத்தில் நெரிசல் - 10 பேர் உயிரிழப்பு - “3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்''
08.35 PM - குழந்தைகள் உயிரை காக்க தூக்கி ஓடும் போலீசார் - மொத்த தமிழகமும் பதற்றத்தில்...
08.37 PM - கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரம் மருத்துவமனை விரைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
08.47 PM - சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூருக்கு விரைய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
கரூர் அரசு மருத்துவமனையை தயார் நிலையில் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
09.00 PM - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி, திருச்சியில் இருந்து
அமைச்சர் அன்பில் மகேஷ் கரூர் விரைந்தார்
09.19 PM - கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் - 31 பேர் உயிரிழப்பு
6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என 31 பேர் பலி
தந்தி டிவி-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09.21 Pm - கரூர் செல்லும் முதலமைச்சர்
கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்
09.30 PM - மருத்துவமனை விரைந்த ஆம்புலன்ஸ்..வழிமறித்து டிரைவரை தாக்கிய நபர்கள்
09.34 PM - திண்டுக்கல், திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் கரூர் விரைய முதல்வர் உத்தரவு
09.43 PM - கலங்கிய கண்கள்... கொடும் துயரத்தை கண்டு... பேச முடியாமல் நின்ற செந்தில் பாலாஜி
09.45 PM - நெரிசலில் சிக்கி 31 பேர் பலி, 51 பேருக்கு சிகிச்சை - செந்தில்பாலாஜி
“தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது“
“கூடுதலாக உயிர் சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை“
திருச்சி, திண்டுக்கல்லில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை கரூர் செல்கிறார்
09.53 PM - விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 31 பேர் பலி - பிரதமர் இரங்கல்
10.08 PM - கரூர் பெருந்துயரம் நெஞ்சை உலுக்குகிறது - ரஜினி இரங்கல்
10.19 PM - செய்தியாளர்களை சந்திக்காமல் சென்ற விஜய்
துயர சம்பவத்திற்கு மத்தியில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்ற த.வெ.க தலைவர் விஜய்
10.25 PM - இரவில் கூடிய தலைமை செயலகம் - சற்று நேரத்தில் CM பிறப்பிக்க போகும் உத்தரவு
10.35 Pm - கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - அமித்ஷா இரங்கல்
10.36 PM - கரூர் துயரச் சம்பவம் - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
10.40 PM - கரூர் கூட்ட நெரிசல்..மன வேதனையுடன் ஈபிஎஸ் சொன்ன வார்த்தைகள்
10.46 PM - துபாயிலிருந்து தமிழகம் திரும்பும் துணை முதல்வர் உதயநிதி
11.03 PM - பிளானை மாற்றிய முதல்வர் - இரவே கரூர் விரைகிறார்
11.25 PM - இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் - விஜய்
11.28 PM - கரூர் துயரச் சம்பவம் - கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷ்
Date: 28.09.2025
02.33 AM - திருச்சி வந்தார் முதல்வர் - உடனே கரூர் விரைகிறார்
02.44 AM - வீடு திரும்பினார் விஜய்...பரபரப்பாக உள்ளே வந்த கார் - வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
03.55 AM - சிகிச்சை பெறுபவர்களுக்கு முதல்வர் ஆறுதல்
சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வர் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
அமைச்சர்கள் மா.சு, எ.வ.வேலு, சிவசங்கர்,கே.என்.நேரு, எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்
ஒவ்வொருவராக சந்தித்து ஆறுதல் கூறும் முதல்வர்
ஒரு மணி நேரம் கழிச்சுதான் செந்தில் பாலாஜி பத்தி செய்தி வருது.
அன்பில் மகேஷ் அதுக்கு அப்புறம்தான்...
ஆனா எப்படி வதந்தி பரப்பறாங்கன்னு பாருங்க...
அடுத்து ஒரு துயரச்சம்பவம் நடக்குது.
யார் காரணம்ங்கறதுக்கு போக வேண்டாம்.
ஆளுங்கட்சி எப்படி இயங்குதுன்னு பாருங்க.
டீவில பாத்து தெரிஞ்சுக்கிட்டன்னு எடப்பாடி மாதிரி சொல்லனுமா?
மோடிக்கு அப்புறம் தான் விஜய்கிட்டருந்து இரங்கல் வருது.
இது எல்லாத்தையும் live ல பாத்துட்டுருந்த நாங்க விஜயை கேள்வியே கேட்க கூடாதுங்கறாங்க.
திமுக மேல குற்றம் சுமத்தறவங்க ஆதாரங்களை வெளியிடுங்க.
அதுக்கு முன்ன ஒரு பேச்சுக்காவது விஜய் தரப்பு அலட்சியம், தவெக தரப்பு அனுபவமின்மை பத்தி கேள்வி கேளுங்க.
இதை தொடரக்கூடாதுன்னு எண்ணம் இருக்கவங்க அதைத்தான் செய்வாங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக