ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

HCL சிவ் நாடார் வீட்டுக்காவலில் உள்ளாரா? பாலசுப்பிரமணிய ஆதித்தன் கட்டுரை

May be an image of 3 people and people smiling

 Balasubramania Adityan T  :  குல தெய்வ வழிபாட்டை நிறுத்தினால் எப்பேர்பட்ட கொம்பனாலும் தப்பிக்க இயலாது.
குல தெய்வ காயாமொழி முப்பிடாரி அம்மனின் கிடா வெட்டை நிறுத்திய எங்கள் முன்னோர்களின் 90 வருட பிளாஷ்பேக் ஸ்டோரி.
குல தெய்வத்திற்கு கிடா வெட்டக் கூடாது என்று யார் சொல்வதையாவது கேட்டு ஆகமத்தை மீறி நிறுத்தினால் அதன்  விளைவு என்ன ஆகும் என்பதை அறிவீர்களா?
காயாமொழி ஆதித்த நாடன் - 1500 ஆண்டு
தையல்பாக ஆதித்த நாடன் - 1782 ஆண்டு
அறுபத்து மூவர் ஆதித்த நாடன் மகன்
சுப்ரமணிய ஆதித்த நாடன்.
சுப்ரமணிய ஆதித்தனது மகன் சிவந்தி ஆதித்தன் நாடார் B.A,B.L.
நாடார் சமுதாயத்தின் முதல் வழக்குரைஞர்.
இவர்களின் மகன் எனது அப்பா S.தையல்பாக ஆதித்தன் என்கிற S.T.ஆதித்தன் B.A,B.L - 1904 ஆண்டு 



S.பாலசுப்ரமணிய ஆதித்தன் என்கிற சி.பா.ஆதித்தனார் - 1905 ஆண்டு
சாத்தான்குளம் தொகுதியில் ஓட்டுக்கு குடும்பத்திற்கு ஒரு எவர்சில்வர் குடம் முதன்முதலில் கொடுத்தவர்.
S.தனஞ்செய ஆதித்தன் - எனது சின்ன சித்தப்பா DSP 1906 ஆண்டு
https://www.facebook.com/share/p/1CJ7hmDij4/
இது போக வக்கீல் சிவந்தி ஆதித்தன் தாத்தாவின் மகள் இருவர்.
மூத்த மகள் வாமசுந்தரி அம்மாள்.இவர்களின்  கணவர் புகழ் பெற்ற நீதிபதி சிவசுப்ரமணிய நாடார். திருச்சி வந்த நேரு இவரை நேரில் வரச் சொன்ன போது நேரு ஏன் என்னை அழைக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் சொல்லும் படியான தீர்ப்பை என்னால் தர இயலாது என்று சொல்லி விடுங்கள் என்று நெஞ்சை நிமிர்த்தியவர்.
இவர்களது பிள்ளைகளில் நீதிபதி பிரதாப்சிங், HCL சிவ் நாடார் குறிப்பிடத் தக்கவர்கள்.
இளைய மகள் கமலம் அம்மாள். இவரது கணவர் மேலே கண்ட நீதிபதி சிவசப்ரமணிய நாடார் அவர்களது சகோதரர் கணேச நாடார்.
இருவருக்கும் ஊர் மூலைப்பொழி.
அண்ணன் தம்பி.
மூலைப் யபொழி அண்ணன் தம்பி, காயாமொழி அக்கா தங்கையை மணந்தவர்கள்.
சுப்ரமணிய ஆதித்தன் பூட்டனார் அவர்களது காலம் வரை திண்ணை கல்வியை தவிர பட்டப்படிப்பு கிடையாது.
அதனால் முன்னோர்கள் ஆகமங்களை மட்டுமே பின்பற்றி குல தெய்வ பஞ்சமகார பலி பூஜை முறையை பின்பற்றி வாழ்ந்து வந்தனர்.
https://www.facebook.com/share/p/1BQcjQKviV/
எப்போது யதார்த்தமான திண்ணைக் கல்வி முறையை விட்டு விட்டு பள்ளிக் கல்வி முறைக்குள் வந்தோமோ அன்றே நாம் குல தெய்வ வழிபாட்டு முறையை மறக்கத் தொடங்கி விட்டோம்.
ஆம்.
எங்கள் தாத்தா சிவந்தி ஆதித்தன் நாடார் அவர்கள் நாடார் சமுதாயத்தில் முதல் வழக்குரைஞர் ஆனதால் எங்கள் சமுதாயத்தில் "வக்கீல் ஐயா" என்று நாடார் சமுதாய மக்களால் மரியாதை உடன் அழைக்கப்பட்டார்.
வக்கீல்ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த நாடன் சிவந்தி ஆதித்த நாடார் தாத்தாவுக்கு வள்ளலார் கும்பல் அறிமுகம் ஆனது.
உருப்படாத வள்ளலார் கும்பல் ஏற்றிய மூளைச் சலவையை நம்பி நம் கோயிலில் இனி கிடா வெட்டக் கூடாது என்கிற ஆகம விரோத எண்ணம் வக்கீல் தாத்தாவின் மனதில் ஏற்பட்டது.
காயாமொழி கோயில் கொடை நேரம் ஆடுகள் வெட்டப்படும் புதன்கிழமை அன்று ஆடு வெட்டும் இடத்தில் ஆட்டை வெட்டாதீர்கள்.
என் தலையை வெட்டி விட்டு ஆட்டை வெட்டுங்கள். இனி நம் ஊரில் கிடா வெட்டக் கூடாது எனும் சமணக் கொள்கையை சொன்னார்.
அன்றைய மக்களுக்கு நாடார் சமுதாயத்தில் ஒருவர்,அதுவும் சட்ட மேதையாக உள்ளவர், ஸ்ரீவைகுண்டத்தின் முதல் பஞ்சாயத்து தலைவராக உள்ளவர் சொல்வதை வேத வாக்காக நம்பினர்.
இந்த ஒரு முறை மட்டும் வெட்டுகிறோம் என்று வெட்டி அதோடு நிறுத்தினார்கள்.
பலிபீடத்தில் வெட்டப்படும் செங்கிடா குட்டியை மட்டும் தொடர்ந்தனர்.
வருடாவருடம் வெட்டுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆடுகளை நம் ஊர் மக்கள் செல்லமாக வளர்த்து வருடம் ஒன்றாக வெட்ட வருவார்கள்.
வக்கீல் நாடார் சொன்ன படி இனி ஆடுகளை வெட்ட மாட்டோம் என்று சொல்லி நிறுத்திய மக்களுக்கு காயாமொழி முப்பிடாரி அம்மனின் தண்டனை கிடைக்காமல் போய் விடுமா❓
அல்லது
வளர்த்து வந்த கிடாக்ளை வெட்ட விடாமல் தடுத்த வக்கீல் நாடாரின் குடும்பத்திற்கு அம்மக்களின் சாபமும், முப்பிடாரி அம்மனின் கோபமும் வராமல் தான் இருக்குமா❓
ஆட விட்டு அழிப்பது தான் இறைவனின் வேலை.
அதே நேரம் குல தெய்வத்திற்கு தேவை ஆத்மார்த்த சரணாகதி.
அம்மா என்கிற மாசற்ற பாசம்.
அவ்வளவுதான்.
அதன் படி சில காலம் போன பின் சி.பா.ஆதித்தன் தமிழக அமைச்சர் ஆன பின் காயாமொழி முப்பிடாரி அம்மன் கோயிலுக்கு வருகிறார்.
அன்று புதன்கிழமை.
செங்கிடா வெட்டி மாடனுக்கு படையல் போட்டு இருந்தது.
தட்சனின் ஆட்டம் தலையை கடவுளாக கொண்ட பிரீமேசன் கிளப்பில் சேர்ந்து லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற சி.பா.ஆதித்தனார் எங்க அப்பாவுக்கு பிடிக்காத கிடா வெட்டை இனி இந்த ஊரில் வெட்டக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
அன்று முதல் மூன்று பிடரிகள் கொண்ட முப்பிடாரி அம்பாளின் பெயரை முப்புராதி என்று அர்த்தம் இல்லாத பெயராக மாற்றினார் சி.பா.ஆதித்தன்.
வக்கீல்,பாரிஸ்டர் என்று எத்தனை படித்தாலும் சிவபெருமானின் ஆகமத்தை எவர் மாற்றினாலும் அவர்கள் நிர்மூலம் ஆவார்கள் என்பதற்கு எங்கள் குடும்பம் ஒரு உதாரணம்.
வக்கீல் நாடார் சிவந்தி ஆதித்தன் மிகப் பெரிய முருக பக்தர். ஆனால் திக்கந்தன பலி பூஜையில் எல்லா திக்கிலும் வெட்டப்பட்ட செங்கிடாவை வெட்டுவதை தடுத்தார்.
தேர் கிடா வெட்டுவதை தடுத்தார்.
தந்தை சொல்வதை நாம் என்ன எப்படி தடுப்பது என்று 42 ஆயிரம் புத்தகங்களையும், ஆகமங்களையும் கற்று தன்னகத்தே கொண்ட 14 மொழிகள் கற்ற என் அப்பா S.T.ஆதித்தன் ஒரு புறம்❗
கடவுளின் வம்சாவளி  ஆகத்தை விட வக்கீல் நாடார் சொல்வதே சிறப்பு என்று எண்ணிய அன்றைய மக்கள்❗
கடவுளின் வம்சாவளி  ஆகத்தை விட வக்கீல் நாடார் மாமா சொல்வதே சிறப்பு என்று எண்ணி மூலைப்பொழியில் கிடா வெட்டை நிறுத்த சம்மதித்த இரு மருமகன்கள் மற்றும் அங்கு உள்ள மக்கள்❗
இப்படி என் தாத்தா, சித்தப்பா ஆகம விரோதமாக செய்ததால் பஞ்ச மகார பலி பூஜை நிறுத்தத்தால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்னென்ன❓என்று பார்க்கலாம்.
♨️ எமை ஆளும் காயாமொழி முப்பிடாரியின் சக்தியில் குறைபாடு ஏற்பட்டது.
♨️கிடா வெட்டு கோயிலுக்குள் இருப்பதால் தேரிக்குடியிருப்பு சாலையில் உள்ள சித்திபுத்தி பிள்ளையாரை காயாமொழி மக்கள் மறந்தார்கள்.
♨️செட்டியார் பிள்ளையார் காயாமொழி முப்பிடாரி கோயிலுக்குள் வந்தார்.
♨️என் அப்பா S.T.ஆதித்தன் அவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தைகள் இல்லாமல் போயிற்று.
இதனால் தனது பச்சைத் துரோகி தம்பி சி.பா.ஆதித்தனை தன் பிள்ளையாக நினைக்க வேண்டிய துர் நிலை என் அப்பாவுக்கு ஏற்பட்டது.
♨️அப்பா கூடவே இருந்த மாதவடையானை சி்பா.ஆதித்தனின் கண் அசைவு தீர்த்து கட்டியதால் என் அப்பா, சி.பா.ஆதித்தன் பிரிவினை வந்து என்று பணத்திற்காக கொலை செய்யும் அளவு உன் குடும்பம் வந்ததோ அந்த பணத்தில் ஒரு தம்படி கூட எனக்கு வேண்டாம் என்று எங்க அப்பா தன் இணை பங்கை வேண்டாம் என்று கையெழுத்து போட்டு தன் நிலையை இழநத்து.
♨️அதன் பிறகு சி.பா.ஆதித்தனின் மகள் சரஸ்வதி அம்மாள் அகால மரணம்.
♨️பலி பீட பலியை நிறுத்திய சி.பா. ஆதித்தனின் மகன்களான சிவந்தி ஆதித்தன் , ராமச்சந்திர ஆதித்தன் தீரா சண்டைகள்.
♨️சிவந்தி ஆதித்தனின் அப்போலோ ஆஸ்பத்திரி சர்ச்சை மரணம்.
♨️எனக்கு ஆண் வாரிசு இல்லாமை.
♨️எனக்கு வாழ்வில் ஏற்பட்ட பினடைவுகள்.
♨️என் உடன் பிறந்த முத்த சகோதரரின் துர் மரணம்.
♨️என் சகோதரிகளின் கஷ்டங்கள்.
♨️என் தாத்தாவின் இளைய மகள் கேன்சரில் காலமான சோகம். அவர்கள் பிள்ளைகள் பட்ட கஷ்டங்கள்.
♨️என் தாத்தாவின் மூத்த மகள் பட்ட பண கஷ்டங்கள்.
♨️அந்த பணகஷ்டத்தை மாற்ற நான் சி.பா.ஆதித்தன் மாமாவை விட பெரிய பணக்காரன் ஆகி காட்டுகிறேன் என்று சொல்லிச் சென்ற  மூலைப்பொழி சிவ்நாடார் நிலை.
சிவ்நாடார் என்ன நல்லாதானே இருக்கிறார் என்று நீங்கள் செய்த சொல்லலாம்.
பணத்தை கேட்டார்.
கடவுள் கொடுத்தார்.
குடும்பத்தை கடவுள் கொடுக்கவில்லை.
குடும்பம் சரி ஆக குல தெய்வம் வேண்டும்ங்க.
சிவ் நாடாருக்கு வட நாட்டு மனைவி.
வட நாட்டு வளர்ப்பு மகள்.
இன்று நாங்கள் யாவரும் பார்க்க இயலாத ஹவுஸ் அரெஸ்ட் .
♨️காயாமொழி மக்கள், மூலைப்பொழி மக்கள், திக்பந்ன பலி பூஜைகளை விட்ட என் மக்கள் நன்றாக உள்ளார்களா❓
சற்று சிந்தியுங்கள்.
இத்தனையையும் செய்த என் தாத்தாவின் பண்ணை வீடுதான் காயாமொழியில் எனக்கு வந்து உள்ளது.
வீட்டில் நுழைந்த உடன் என் அப்பா மதிக்கும் என் தாத்தாவின் படம்தான் அலங்கரிக்கும்.
ஆனால் சிவபெருமானின் ஆகமமா❓
என் தாத்தாவா என்று வந்தால்❓
படைத்த ஈசனின் ஆகமமே பெரிது என்று என் முன்னோர்கள் விட்டுச் சென்ற பஞ்ச மகார பலி பூஜையை நான் கடைபிடித்து உங்களுக்கும் சொல்லி வருகிறேன்.
இப்பதிவு என் குடும்ப உறுப்பினர்களை காயம் செய்ய அல்ல.
புரிந்து கொள்ள மட்டுமே❗
நம் தாயான குல தெய்வத்தை மிஞ்சிய சக்தி உலகில் ஏதும் இல்லை.
எங்கெல்லாம் குல தெய்வ பலி படையல் நின்று போனது அவற்றை எல்லாம் மீட்டு எடுங்கள்.
நீங்க வக்கீல் ஆனாலோ, அலோபதி டாக்டர் ஆனாலோ,கொம்பாதி கொம்பனே ஆனாலும் குல தெய்வ பஞ்ச மகார பலி பூஜை ஆகமம் ஒருபோதும் மாறாது.
படத்தில் இருப்பது அத்தை மடி மெத்தை மடி என சிறு வயதில் பாடிய HCL சிவ் நாடாரின் அத்தையும் என் அம்மாவுமான சோமசுந்தரி ஆதித்தன்.
தனி மனித மாற்றமே நம்   சமுதாயத்தின் மாற்றம்.
பகிர்வோம்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

என் உடன் பிறந்த முத்த சகோதரரின் துர் மரணம் - வைரவேல் திருடி, கோவில் Executive Officer சுப்ரமணியம்சாமியை கொன்று, அதே நாளில் அடுத்த வருடம், அருள்மிகு திருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமி துணை என்று எழுதியருந்த லாரி மோதி விபத்தில் இறந்த கேசவ ஆதித்தனை சொல்கிறீர்களா ?