செவ்வாய், 30 செப்டம்பர், 2025

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி-சீனா வெளியுறவு அமைச்சகம் இரங்கல்

u Feihong  : Deeply saddened by the tragic incident in Karur, Tamil Nadu.
Our heartfelt condolences to the families who have lost their loved ones.
Wishing strength and healing to all those affected.    மின்னம்பலம் ;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்கு சீனா வெளியுறவு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியா குன் கூறுகையில், “இச்சம்பவத்தை நாங்கள் கவனித்துள்ளோம். உயிரிழந்தோருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கின்றோம். , உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்து கொள்கின்றோம் என்றார்.
முன்னதாக இந்தியாவுக்கான சீனத தூதரகம் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: