வியாழன், 30 மே, 2019

நேசமணியின் நிலைக்கு இந்த விக்னேஷ்தான் காரணம் - இவர் என்ன சொல்றாருன்னா.. `#Pray_For_Neasamani

#Pray_For_Neasamanivikatan.com -பிரேம் குமார் எஸ்.கே. : சமூக வலைதலங்களில் எது ஹிட் அடிக்கும் என்பவை சமூக வலைதளவாசிகளாலே புரிந்துகொள்ள முடியாத விஷயம். போகிறபோக்கில் ஒரு கமென்ட் அடித்துவிட்டு போனை ஆஃப் செய்துவிட்டு படுத்தால், எழுந்து பார்க்கும்போது நீங்கள்தான் டிரெண்டிங் ஸ்டார் என்றால் எப்படி இருக்கும். அப்படிதான் இருந்திருக்கும் இந்த `நேசமணி’ விக்னேஷுக்கு.
நேற்றையை சமூகவலைதள பக்கத்தில் மீண்டும் ஹிட் அடித்திருக்கிறார் வடிவேலு. இது அவருக்கு சர்வசாதாரண விஷயம்தான். நேற்று டிரெண்டானது நேசமணி... அட நம்ம கான்ட்ராக்டர் நேசமணிதான். நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என சினிமா தியேட்டர்களில் கேட்பது மாதிரி ஆளாளுக்கு நேசமணிக்கு என்ன ஆச்சு? உயிருக்கு ஒன்னும் இல்லியே? நேசமணி உடல்நிலை காரணமாக பதவியேற்பு விழா தள்ளிவைப்பு என்பது மாதிரியான போஸ்ட்டுகள் பறந்தன. மோடியின் 2.0 பதவியேற்பு விழாவைத் தாண்டி உலகளவில் டிரெண்டு ஆனார் இந்த நேசமணி.  



உண்மையில் நேசமணிக்கு என்னதான் ஆச்சு?

`Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கம் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு `உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்' எனக் கேட்க விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம்' எனப் பிரபல ஃபிரெண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி கமென்ட் செய்தார். அதன்பின்னர் நடந்ததெல்லாம் இந்த உலகம் அறியும்.
நேசமணி
Photo: Twitter Moments India‏
நேசமணியின் இந்த நிலைக்கு காரணமானவர் யார் என்றால் அது விக்னேஷ் பிரபாகர் என்னும் சிவில் இன்ஜினீயர். ஏன் பாஸ் நேசமணியை இப்படி பண்ணினீங்க... நீங்க யாருன்னு அவரிடமே கேட்டோம். ``என் பேரு விக்னேஷ் பிரபாகர். தூத்துக்குடி மாவட்டத்துல புதூர்தான் சொந்த ஊரு. ஸ்கூல் படிச்சதெல்லாம் அருப்புக்கோட்டையில..  சிவகாசி காலேஜ்ல சிவில் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சிட்டு ஊர்ல வேலைப்பாத்துகிட்டு இருந்தேன். அப்பா, 10 வருஷமா துபாய்ல வேலை பாத்தாங்க. அப்பா மூலமா துபாய்ல வேலை கிடைச்சுது. நல்ல வேலை... ஹேப்பியா போகுது பாஸ்” என்றார்.
விக்னேஷ்
சரி விஷயத்துக்கு வாங்க என நேசமணி விவகாரத்துக்குள் கொண்டு வந்தோம், ``உங்க எல்லோருக்கும் வைரல் ஆன இந்த கமென்ட்தான் தெரியும். ஆனால், உண்மையில் நான் இந்த கமென்ட் போடுறதுக்கு ரெண்டு நாள் முன்னால இதே விஷயத்தை இதே மாதிரி ஒரு போஸ்ட்டுக்கு தமிழ்ல கமென்ட் பண்ணி இருந்தேன். ஆனா அத யாரும் கண்டுக்கல. அதுக்கு கீழ வேறு ஒரு நண்பர் வடிவேல் சார் தலையில சுத்தியல் விழுற அந்தக் காட்சியை `gif’ வீடியோவாக கமென்ட் பண்ணிருந்தார்.
நிப்பான் பெயிண்ட் விளம்பரம்
அதுக்கு அப்புறம் நீங்க பாக்குற இந்த வைரல் போஸ்ட்ல என் நண்பன் ஒருத்தர் என் பெயரை டேக் பண்ணியிருந்தான். நான் அப்போ வேலையில இருந்தேன். சைட்ல ரொம்ப வெயிலா இருக்கும். அப்போ டைம் கிடைக்கிறப்போ ஏ.சி ரூம் உள்ள 10 நிமிஷம் வந்து போவோம். அப்போ ஃபேஸ்புக் பாக்குறப்போதான் நண்பன் டேக் செய்த விஷயம் தெரிஞ்சிது. சரி, நம்மகிட்ட இருந்து ஏதோ எதிர்பார்க்குறாங்கனு இந்த வாட்டி இங்கிலீஷ்லேயே கமென்ட் பண்ணிட்டு எப்பவும் போல வேலைக்குப் போயிட்டேன். அதுல நேசமணி பத்தி நலம் விசாரிப்பவரும் என் நண்பர்தான். அவருக்கு நக்கலுக்காக சீரியஸாக கேட்க நானும் அதே டோன்ல ரிப்ளெ பண்ணினேன்.

அப்போ சத்தியமா தெரியாது, இப்படி எல்லாம் ஆகும்னு. இந்த கமென்ட்-ஐ என் ஸ்கூல் நண்பன் ஒருத்தன் மீமாக போட்டு ஸ்கூல் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்-ல போட்டான். தெரிஞ்சவங்க எல்லாம் ரொம்ப காமெடியா இருந்திச்சுன்னு சொன்னாங்க.. அது அத்தோட முடிஞ்சிதுன்னுதான் இருந்தேன். ஆனால், அடுத்தநாள் காலையில் அந்த நண்பர் கூப்பிட்டு உன் கமென்ட் வைச்சு போட்ட மீம் செம்ம ஹிட்டுனு ஏதோ லைக்னு ஷேர் நம்பர் எல்லாம் சொன்னான். அப்பகூட எனக்கு பெருசா படல.
வைரல் மீம்
நேற்று வேலை முடிச்சிட்டு வரும்போது என் மாமா கூப்பிட்டு உன் கமென்ட் செம ஹிட்டு. எங்க ஆபீஸ் ஃபுல்லா அதுதான் சுத்துதுன்னு சொன்னாங்க. ரூம்ல வந்து நெட் ஆன் பண்ணினதுக்கு அப்புறம்தான் தெரியும் இந்த டிரெண்டிங் சமாசாரம் எல்லாம். என் போன் ஹேங் ஆகுற அளவுக்கு என்ன டேக் பண்ணிருந்தாங்க... மெசேஜ், வாட்ஸ்அப் வேற. மொத்ததுல என் போன் ஹேங் ஆகி படாதபாடு பட்டேன். ஓப்பன் பண்ணாத மெசேஜே இன்னும் நிறைய இருக்கு.
மீம்ஸ்
`தமிழ்நாட்டு அளவுல ஓகே.. அனா இந்திய டிரெண்டிங்ன்னு சொன்னப்போ எனக்கு தலையே சுத்திடிச்சு. அப்புறம் உலக டிரெண்டிங்ல ஏழுன்னு சொன்னங்க...  நாலுன்னு சொன்னாங்க... எனக்கு என்னனு சொல்ல தெரியாத பயம் வந்திடிச்சு. நைட் சாப்பிடக்கூட இல்ல.. அப்படியே தூங்கிட்டேன். நான் இந்த ட்விட்டர்ல ஆக்டிவ் கிடையாது. நான் அஜித் ரசிகன். அஜித் படம் வெளியாகும்போது டிரெண்டிங்ல வரும். அத பாக்குறதுக்காகதான் ட்விட்டர் அக்கவுன்ட் வச்சிருந்தேன். ரொம்ப நாளா ஓப்பன் பண்ணாததுனால அது நேத்து ஓப்பன் ஆகல.   இன்னைக்கு ஒரு முக்கியமான அசைமென்ட் வேற முடிக்கணும். முடிக்கல, இத வச்சுதான் ஆபீஸ்ல என்ன திட்டுவாங்க...” என்றார்.
சரி பாஸ் கடைசியா நேசமணி விஷயத்துல ஒரு `நச்’ கமென்ட் சொல்லலாம்னா என்ன சொல்லுவீங்கனு கேட்டா #Pray_For_Neasamani” என முடித்துக்கொண்டார் இந்த வி.ஐ.பி

கருத்துகள் இல்லை: