வெள்ளி, 31 மே, 2019

மருத்துவர் பாயல் தாத்வி நாட்டின் முதல் பழங்குடி இன மருத்துவர் தற்கொலை அல்ல .. கழுத்தில் காயம் ..

மருத்துவர் பாயல் தாத்வி
JusticeForDrPayalTadvi : தற்கொலை னு சொல்லப்பட்ட மருத்துவ மாணவி பாயல் கயிற்றால கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதா பிரேத பரிசோதனை அறிக்கையில சொல்லியிருக்கிறார்கள் ..
யார் இந்த பாயல்?
இன்று   உயிரோட இருந்திருந்தால்  இன்னும் சில வருடங்கள்ல இந்தியாவினுடைய முதல் பழங்குடியின MD மருத்துவராக இருந்திருப்பார்..
உங்களோட படுக்கை விரிப்புல எச்சில் துப்பப்பட்டு இருந்தா உங்களுக்கு எப்டி இருக்கும்?
அதுவும் வேண்டுமென்றே  சிலரால திட்டமிட்டு செய்யப்பட்டிருந்தா? ,டாய்லெட் போயிட்டு வந்து உங்க போர்வையில தொடச்சா???
இதெல்லாம் மும்பை நாயர் மருத்துவக் கல்லூரியில MD மகப்பேறு மருத்துவப் படிப்புல சேர்ந்த 'தாட்வி பில்' ன்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவி பாயலுக்கு அவங்க சீனியர்ஸ் 3 பேரால நடந்திருக்கிறது ..
அதுக்குப் பின்னாடி சாதி என்ற விசயத்த தவிர வேற எதுவுமே காரணம் இல்ல...
"பழங்குடியின பெண் நீ லாம் எங்களுக்கு சமமா வரலாமா" ன்ற ஆதிக்க எண்ணம்தான் whatsapp group create பண்ணி "quota ல வந்த உனக்கு எந்த திறமையும் இல்ல,நீ operation பண்ணக்கூடாது" னு அந்தப் பொண்ணுக்கு உளவியல் நெருக்கடி கொடுத்து இப்போ கொலையும் செய்ய வைச்சிருக்கு...
"SC,ST மக்களுக்குத் திறமையில்ல,திறமையும் தகுதியும் இல்லாத அவங்க இட ஒதுக்கீட்ட வச்சுதான் மேல வராங்க, மற்ற எல்லோரோட வாய்ப்புகளையும் தட்டிப் பறிக்கிறாங்க" ன்ற பொதுப்புத்தி இந்தியா முழுக்க படிச்சவங்ககிட்ட இருக்கு....

இட ஒதுக்கீடு னா என்ன,அத எப்டி அமல்படுத்துறாங்க னு எதுவுமே முழுசா தெரியாம சாதிய வன்மத்தோட ஒடுக்கப்படுற மக்கள தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குறது ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டவங்களுக்கு கைவந்த கலையா இருக்கு...
உண்மையில சொல்லப்போனா Medical cutoff MBC,OC க்கு 197 இருந்ததுனா SC,ST க்கு 195 இருக்கும்...அந்த 2 மதிப்பெண் இடைவெளிதான் காலங்காலமா அவங்கள ஒடுக்குனதுக்காக செய்யப்படுற பரிகாரமான சமூகநீதி...அதை புரிஞ்சுக்காம தெரிஞ்சுக்காம இருக்குறது பொதுச்சமூகத்தோட பிழை...

இங்க நீங்க சாதி பார்க்காத ஆளா இருக்கலாம்....ஆனா அப்டி சாதி பார்க்குறவங்கள எதிர்த்துக் கேக்க தைரியம் இல்லாம "இப்போலாம் யாரும் சாதி பார்க்குறது இல்ல" னு பொய்யா நடிக்கிறது சாதிவெறியோட அலையிறதவிட ஆயிரம் மடங்கு மோசமானது...
இதுமாதிரி இன்னும் எத்தனை பேர் ஆசிரியர்களாலயும் சக மாணவர்களாலயும
Via BR leopards
.vinavu.com - கலைமதி : t;சா
திவெறி படிக்காதவர்களிடம் மட்டுமே இருக்கும் பண்பா ? படிப்பிற்கும் சாதிவெறிக்கும் தொடர்புண்டா ?  படித்தவர்களிடம் சாதிவெறி இருக்குமா ?
மருத்துவர் ராமதாசும், அவரது இளவல் அன்புமணியும் படிக்கவில்லையா ? ”சமூக நீதிக் காவலர்” பட்டத்தை தனக்குத் தானே சூட்டிக் கொண்ட மெத்தப் படித்த ”மருத்துவர் ஐயா” அவர்களுக்கே சாதி வெறி நிரம்பி வழிகையில், படித்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு சாதிவெறி இருக்காதா என்ன ?
இருபத்தாறு வயதான மருத்துவர் பாயல் தாத்வி, மும்பை நாயர் மருத்துவ கல்லூரியில் எம்.டி. மகப்பேறு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த மாணவி. ஆதிவாசி தாத்வி பில் என்ற பழங்குடியின சாதியைச் சேர்ந்தவர். அவருடைய குடும்பத்தில் மருத்துவம் படித்த முதல் பெண். ‘நீட்’ என்னும் அநீதியான வழிமுறை மூலம் அனைவரும் மருத்துவம் படித்துவிடக்கூடாது என மனுஷ்மிருதி அரசாங்கம் பல அனிதாக்களை கொன்று கொண்டிருக்கும் காலத்தில், அதையும் மீறி பாயல் எம்.டி. படிப்பு வரை சென்றார்.
உயர் படிப்புகளும் உயர்ந்த கல்விக்கூடங்களும் தங்களுக்காகவே உள்ளவை என சாதிய வன்மத்துடன் அலையும் நபர்கள் நிரம்பிய இடங்களில் பாயல் போன்றவர்கள் உயிருடன் மீள்வது மிகப் பெரும் சாதனையாகவே இருக்கும். பாயல் தாத்வியால் அத்தகையதொரு சாதனையை படைக்க முடியவில்லை, தன்னை மாய்த்துக்கொள்வதன் மூலம் சாதிய வன்மத்திலிருந்து விடுபட்டு விடலாம் என அவர் நினைத்திருக்கிறார். அதன்படி, கடந்த புதன்கிழமை தன்னுடைய அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார் பாயல்.



பாயல் தாத்வியின் பெற்றோரும் அவரது கணவரும்; பாயலுடன் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மூன்று மருத்துவர்கள்தான் அவரது இறப்புக்குக் காரணம் என்கிறார்கள். சாதிய வன்மத்துடன் பாயலை அவர்கள் நடத்தியதாகவும் இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீனுக்கு எழுதிய புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தொடர்ச்சியாக அவர்கள் பாயலை சாதிரீதியாக துன்புறுத்தியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
“எங்கள் சாதியில் மருத்துவ மேல்படிப்பு படிக்கும் முதல் பெண், என் மகள்தான். எங்கள் குடும்பத்திலும் மருத்துவம் படிக்கும் முதல் பெண். அவர் நன்றாக படிக்கக்கூடிய மாணவி, கடினமாக உழைத்துதான் இந்த நிலைக்கு வந்தார்” என கண்ணீருடன் நினைவு கூறுகிறார் பாயலின் அம்மா, அபேதா தாத்வி.
மகாராஷ்டிர மாநிலம் ஜால்கானில் உள்ள வட்டார அலுவலகத்தில் பாயலின் பெற்றோர் பணியாற்றுகிறார்கள். அவருடைய மூத்த சகோதரர் உடல் குறைபாடு கொண்டவர். “தன் அண்ணனின் உடல் குறைபாடு காரணமாகத்தான் பாயல் மருத்துவம் படிக்க விரும்பினார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது மருத்துவம் படிக்க விரும்புவதாகக் கூறினார். எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் பாயலின் முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றது” என்கிறார் அபேதா.
மிரஜ் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்த பாயல், மருத்துவ மேல் படிப்புக்காக நாயர் மருத்துவமனை கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.
“நாயர் மருத்துவமனையில் மேல்படிப்புக்காக சேர்ந்தபோது, தற்காலிகமாக ஹேமா அனுஜ் மற்றும் பக்தி மெஹர் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். அப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பாயலை துன்புறுத்தத் தொடங்கினர்” என்கிறார் பாயலின் கணவர் மருத்துவர் சல்மான் தாத்வி.

“அந்த இரண்டு மருத்துவர்களும் கழிப்பறை சென்றுவிட்டு வந்து, பாயலில் போர்வையில் காலை துடைத்திருக்கிறார்கள், அதில் துப்பியும் வைத்திருக்கிறார்கள். எங்காவது வெளியே சென்றிருந்தால், கணவருடன் நேரத்தை செலவிடவே வெளியே சென்றிருக்கிறார் என கூறி கேலி செய்துள்ளனர்” என மருத்துவம் படித்த அந்த சாதிவெறியர் குறித்து சொல்கிறார் சல்மான்.
இந்த இருவடன் அங்கிதா கந்தேவால் என்பவரும் சேர்ந்து பாயலை சாதிய வன்மத்துடன் ராகிங் செய்துள்ளனர். மருத்துவர்களுக்கிடையேயான வாட்சப் குழுவில் பாயலை சாதிவெறியுடன் விளித்துள்ளனர். இந்த வாட்சப் செய்திகளை தன் கணவரிடமும் அம்மாவிடமும் பகிர்ந்துள்ளார் பாயல். கணவரை சந்திக்க அனுமதி மறுப்பது, பணியின்போது உணவு உண்பதற்குரிய நேரத்தில் அவரை உண்ணவிடாமல் செய்வது என அவருக்கு தொடர்ச்சியாக மனரீதியிலான தொல்லையை பணியிடத்திலும் தந்துள்ளனர்.
புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் அவருடைய அம்மாவைக்கூட சந்திக்க விடாமல் தடுத்துள்ளனர். 2018 டிசம்பர் வாக்கில் பாயலின் அம்மா, இந்த மூன்று மருத்துவர்கள் குறித்து மகப்பேறு மருத்துவ துறையின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.





“புதன்கிழமை மாலை 4 மணி வாக்கில் பேசிய பாயல், அழுதுகொண்டே தான் அனுபவித்துவரும் சித்ரவதைகள் குறித்து பேசினார். நான் அடுத்த நாளே அங்கு வருவதாகச் சொல்லி, பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகக் கூறினேன்” என்கிறார் அபேதா.
“என் மகள் மிகவும் உறுதியானவர். தொடர்ச்சியாக இந்த மூவரும் துன்புறுத்தியதால் அவர் உடைந்து போயிருக்கிறார். இவர்கள் மூவரும் தண்டிக்கப்படுவதன் மூலம்தான் இத்தகைய கொடுமைகளை செய்பவர்களுக்கு அது உதாரணமாக இருக்கும்.” என்கிறார்.  தன்னுடைய மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் எனவும் நம்புகிறார் அபேதா.
பாயலின் சகோதரரான ரிதேஷ், “எங்களுக்கு நீதி வேண்டும். நாங்கள் ஏற்கெனவே டீனைக் காண பலமுறை முயற்சித்தோம். ஆனால், முடியவில்லை. நான் உடல் குறைபாடு உள்ளவன். அம்மா புற்றுநோயாளி. எங்களுடைய ஒரே நம்பிக்கையாக இருந்தவர் பாயல் மட்டுமே” என்கிறார்.
“என் தங்கையை துன்புறுத்திய மூன்று மருத்துவர்களின் மருத்துவ பட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்” என்கிறார் ரிதேஷ். பாயலை சாதிரீதியாக துன்புறுத்திய மூன்று மருத்துவர்களும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ரோஹித் வெமுலா ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் பயில்கையில் விடுதியிலிருந்து வெளியேறுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்கலை நிர்வாகமும், ஏபிவிபி குண்டர்படையும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் சேர்ந்து மிரட்டி தற்கொலைக்குத் தள்ளியது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ உயர்படிப்புக்குச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர் ஜுலை 10-ம் தேதியன்று மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார். அவர் தனது கையில் தானே விசமருந்து ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியது நிர்வாகம். ஆனால் இது சரவணனின் மருத்துவக் கல்லூரி சீட்டைப் மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில் விற்பதற்காக நடத்தப்பட்ட கொலை இது எனக் குற்றம்சாட்டினர் சரவணனின் பெற்றோர்.
குஜராத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்புக்குச் சென்ற மருத்துவர் மாரிராஜ் அங்கு தொடர்ச்சியாக சாதியரீதியாக இழிவுபடுத்தப்பட்டதன் விளைவாக தற்கொலைக்கு முயன்றார். உடனிருந்த நண்பர்கள் சிலர் உடனடியாகப் பார்த்ததால் அவர் மரணத்திலிருந்து மீண்டார். இருப்பினும் அவரை இறுதி வரையிலும் தேர்வு எழுதவிடாமல் தடுத்து நிறுத்தியது கல்லூரி நிர்வாகம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து மருத்துவக் கனவோடு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா, நீட் எனும் மனுதர்ம தேர்வுமுறையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். சரியாகச் சொல்வதானால், மனுவால் சனாதன தர்மப்படி கொல்லப்பட்டார்.
இவ்விவகாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி அம்பலமான பின்னர்தான் இந்தியா முழுவதும் இது குறித்துப் பேசப்பட்டது. ரோஹித் வெமுலா, அனிதா மரணங்களைப் போல பாயலின் மரணமும் சமூக ஊடகங்கள் மூலமாக அதிர்வுகளை எழுப்பியிருக்கிறது. பாயலுக்கு நீதி கேட்டு பலர் எழுதுகின்றனர். நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்திருப்பது சனாதன சாதியத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரு அரசு. அதனிடம் வேண்டிப் பயனில்லை; போராடினால் மட்டுமே நீதி கிடைக்க வழியுண்டு…
வினவு செய்திப் பிரிவு
கலைமதி
நன்றி: தி இந்து,  ஹிந்துஸ்தான் டைம்ஸ்

கருத்துகள் இல்லை: