மனங்களில் இல்லை. எனவே ராஜினாமா முடிவை கைவிடுமாறு ராகுலுக்கு ஸ்டாலின் அறிவுரை.
17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி மோடி அமைச்சரவை பதவியேற்க உள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமை (மே 25) அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாகவும், அதற்க்கான கடிதத்தை கட்சியின் மேலிடத்தில் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தை அளித்ததாக ஊடங்களிலும், பத்திரிக்கைகளிலும் வெளியான தகவல் உண்மை இல்லை என காங்கிரஸின் தகவல் தொடர்பு அலுவலர் ரந்தீப் சிங் சுர்ஜேவலா விளக்கம் அளித்தார்.
ஆனால் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதில் ராகுல் காந்தி தெளிவாக உள்ளதாகவும், அதில் இருந்து பின்வாங்க மாட்டேன். யாரும் எனது ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டாம் என ராகுல் கூறியதாக காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
ராகுல் காந்தி கட்சியின் மூத்த தலைவர்களை கடந்த திங்களன்று (மே 27) சந்தித்துப் பேசினார். அப்பொழுது அவர் கட்சி தலைவராக இருக்க விரும்பவில்லை என தெளிவுபடுத்தியதாகவும், தனக்கு பதிலாக வேறு யாராவது தேர்ந்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும், அப்படி தேர்வு செய்யப்படுபவர் காந்தி குடும்பத்தை சேர்ந்த்தவராக இருக்கக் கூடாது எனக் கூறியதாகத் தெரிகிறது.
ராகுல் காந்தியை சமாதனம் செய்யும் முயற்ச்சியில் பல தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் ராகுல் காந்தியு தொடர்புக்கொண்டு பேசினார். அப்பொழுது தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை கைவிடுமாறு கூறியுள்ளார். தேர்தலில் தான் தோல்வி ஏற்ப்பட்டிருகிறது. ஆனால் மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளோம். ஆக்கபூர்வமாக செயல்படுவோம் எனக் ஸ்டாலின் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக