வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்திய சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்

ஆர் எஸ் எஸ் குண்டர்கள் பேருந்து மீது ..
பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த வந்த சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்தினத்தந்தி :பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சுவாமி அக்னிவேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். புதுடெல்லி :79 வயதான சமூக ஆர்வலர்  சுவாமி அக்னிவேஷ்  இவர் இன்று  பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த  முன்னால் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது அவரை சிலர் வழியில் மறித்து  தக்கி உள்ளனர்.
இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில்  வைரலாகியது. இது குறித்து சுவாமி அக்னிவேஷ் கூறும் போது அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு நான் அஞ்சலி செலுத்த பா.ஜ. தலைமையிடத்திற்கு சென்ற போது  நான் தாக்கப்பட்டேன். சுமார் 20-30 பேர் பா.ஜ.கவினர்  வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு  என்னை கிழே தள்ளினர். அவர்கள் என்னை துரோகி என்று அழைத்தார்கள்.  என் மீது தாக்குதல் தொடுத்தனர். சில பெண்களும் என்னை செருப்பை கொண்டு தாக்கினார்கள். அங்கு சில போலீஸ்காரர்கள் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. என கூறினார்.


அங்கு செல்வதற்கு முன்பு பிஜேபி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோருக்கு அவர் தெரிவித்து இருந்தார். இந்த தாக்குதல் குறித்து  அக்னிவேஷ் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

போலீஸ் இதுவரை என்னிடம் வரவில்லை.   நான் தாக்கப்பட்டது தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. வன்முறை மற்றும் சகிப்புத்தன்மை அற்ற  ஒரு சூழ்நிலையை உள்ளது என சுவாமி கூறி உள்ளார்.

கடந்த மாதம் ஜார்கண்டில் பாகூருக்கு சுவாமி அக்னிவேஷ் வந்தபோது பாரதீய ஜனதா இளைஞர் அணியினாரால் தாக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை: