tamil.oneindia.com
சென்னை:
கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் அதிகளவில் வருவதால் தமிழகத்தில் 11
மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 1.55 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று 2.50 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்துக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு மத்திய நீர்வள ஆணையம் 4வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
வெள்ளம் குறித்து மத்திய நீர்வளத்துறை ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக