ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

சென்னையில் ராகுலுக்கு ஏன் போதிய பாதுகாப்பு தரப்படவில்லை? ஏன் இது ஒரு சதியாக இருக்க கூடாது?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலைஞரின் இறுதி நிகழ்வுகளில்
கலந்து கொண்ட போது ஏன் போதிய பாதுகாப்பை  தமிழக  அரசு தரவில்லை என்ற  கேள்வி எழுந்துள்ளது  
மிகவும் பாதுகாப்பு  அற்ற  சூழ்நிலையிலேயே  பங்கு பற்றி உள்ளார்.
இது  நிச்சயமாக பல சந்தேக கேள்விகளை எழுப்புகிறது.
மறைந்த ராஜீவ் காந்தியின் மரணத்துக்கு காரணமான புலி இயக்கத்தின் ஆதரவாளர்கள் அனுதாபிகள் தாரளமாக வெளிப்படையாகவே தமிழகத்தில் இருப்பது எல்லோரும் அறிந்ததே.
அவர்கள் ஈழ விவகாரத்தில் கலைஞரும்  மத்திய அரசும் சேர்ந்து புலிகளுக்கு அழிவை ஏற்படுத்தி விட்டதாக ஓயாமல்  கூறுகிறார்கள்.
கலைஞர் மறைவை அவர்கள் வரவேற்பது போல புலம்பெயர் நாடுகளிலும் சமுக ஊடகங்களில் கருத்துக்களை பரப்புகிறார்கள் .
அவர்களின் உள்ளூர் ஏஜெண்டுகள் போல செயல்படும் சீமான் திருமுருகன் காந்தி போன்றோரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புலம் பெயர் ஈழ புலி ஆதரவாளர்களை குளிர்விக்கும் வெறுப்பு பிரசாரங்களை மேற்கொள்வது வாடிக்கை.
இந்த விடயங்களை விட மற்றொரு முக்கியமான  வேறொரு கோணத்தில் இருந்து ராகுல் காந்தியின் பாதுகாப்பு பற்றி கண்டிப்பாக சிந்திக்க வேண்டி உள்ளது.
 பாஜகவும் அதன் இந்துத்வாக்களும் தற்போது ராகுல் காந்தியை எண்ணி பயப்படுகிறார்கள் ..;
இதுவரை ராகுலை பப்பு என்று கேலியாக குறிப்பிட்ட பிம்பம் தற்போது மாறிவிட்டது .
ராகுல் தற்போது மக்களின் நம்பிக்கை பெற்ற ஒரு தேசிய தலைவராக நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டார் .
மோடிக்கு மாற்றாக ஒரு பலம் வாய்ந்த பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி உருவாகி விட்டார்.
தமிழக அரசில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் நிச்சயம் இந்த விடயங்கள் தெரியாமல் இருக்க முடியாது.
கலைஞரின் இறுதி நிகழ்வுக்கு மெரீனாவை மறுத்த சக்திகள் பற்றியும் இந்த விடயத்தில் கொஞ்சம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
எதாவது சிறு அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அது யாருக்கு இலாபம் அல்லது யாரை மகிழ்விக்கும் என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
கூலி படைகள் போல செயல்பட உள்ளூர் ரவுடிகள் மட்டுமல்ல ஏராளமான அரசியல் பாசிஸ்டுகளும் உள்ளார்கள்.


இந்த கோணத்தில் எல்லாம் எடப்பாடி - பன்னீர் அரசெல்லாம் சிந்திக்காது என்று மட்டும் யாரும் கூறிவிடாதீர்கள் .
ராஜீவ் காந்தியின் மரணத்தை காட்டி ஆட்சியை பிடித்தது அதிமுக.
ராஜீவ் கொலையாளிகளின் மரணத்திலும் அதையே காரணம் காட்டி ஆட்சியை பிடித்தது அதிமுக.
இந்த விளையட்டு அவர்களுக்கு தெரியாததல்ல .. அதில் அவர்கள் வல்லவர்கள்.

தூத்துக்குடியில் எப்படி வீட்டுக்குள் வைதெல்லாம் சுட்டு கொன்றார்கள்? அவற்றை எல்லாம் எப்படி மூடி மறைத்தார்கள் என்பதெல்லாம் மறக்க முடியுமா?
மோடிக்கு எவ்வளவு கடுமையான பாதுகாப்பை கொடுத்தார்கள்?
மோடியை விட பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது அதே அளவு பாதுகாப்பு அச்சுறுத்தல்  ராகுல் காந்திக்கு இல்லையா?

Sutha ONEINDIA TAMIL ON ராகுல் காந்திக்குப் போதிய பாதுகாப்பு தராத தமிழக போலீஸ்-
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக சென்னை வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக போலீஸார் போதிய பாதுகாப்பு தரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உளவுப் பிரிவு அறிக்கை அனுப்பியுள்ளது.
 காங்கிரஸ் கட்சியும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. IB not happy with TN polices security to Rahul Gandhi திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல், கூட்ட நெரிசல் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு பக்காவாக இருந்தது.
ஆனால் பிரதமர் வந்து சென்ற பின்னர் நிலைமை மாறியது. திடீரென கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. ராஜாஜி ஹால் படியேறி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்த வந்து விட்டனர். அதேபோல விஐபிக்கள் வரும் பாதைகளையும் ஆக்கிரமித்து புகத் தொடங்கினர்.
இதனால் அந்த இடமே களேபரமாகப் போனது. போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். போதிய அளவில் போலீஸாரும் இல்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு வருகை தந்தார். அவரை விஐபிக்கள் வரும் பாதை வழியாக கூட்டி வர முடியவில்லை. இதனால் பக்கவாட்டில் இருந்த மாடிப்படி வழியாக கூட்டி வந்தனர். ஆனால் அங்கும் பெரும் கூட்ட நெரிசலில் அவர் சிக்கிக் கொண்டார்.

 தொண்டர்களோடு தொண்டராக படு சாதாரணமாக அவர் அழைத்து வரப்பட்டார். விஷமிகள் யாரேனும் கூட்டத்தில் இருந்திருந்தால் நிச்சயம் ஏதாவது விபரீதம் நடந்திருக்கும். அந்த அளவுக்கு பாதுகாப்பே இல்லாத நிலையில் ராகுல் காந்தி இருந்தார்.
அவரைச் சுற்றி அவரது பாதுகாப்புப் படையினர்தான் இருந்தனர். போலீஸாரை அதிகம் பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக பாதுகாப்பு இல்லாத சூழலில் இருந்தார் ராகுல் காந்தி. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தமிழக போலீஸார் இப்படியா ராகுலின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவார்கள் என மத்திய உளவுப் பிரிவு அதிருப்தியும், கோபமும் கொண்டுள்ளதாம்.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு அது அறிக்கை அனுப்பியுள்ளதாம். ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்: இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: