ஞாயிறு, 14 மே, 2017

பேச்சுவார்த்தை தோல்வி - முன் கூட்டியே தொடங்கியது போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தம்!

தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை இன்றும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நாளை முதல் நடைபெறுமென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் முன் கூட்டியே ஸ்டிரைக் தொடங்கியது. தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற வைக்கும் நோக்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி வந்தது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர் நல வாரிய துணை ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்றும் நடந்தது. மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், அண்ணா தொழிற்சங்கம் ஆர்.சின்னசாமி, தொ.மு.ச. சண்முகம், சி.ஐ.டி.யு. ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி. லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை.<றுமென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.< இருப்பினும், தமிழகத்தின் பல இடங்களில் முன் கூட்டி இன்றே ஸ்டிரைக் தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. பல பேருந்துகள் பனிமனையிலேயே நிறுத்தப்பட்டன. நாளை பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். மாலைமலர்

கருத்துகள் இல்லை: