ஞாயிறு, 14 மே, 2017

மதுரை .. புதுமணப்பெண் சுகன்யா எரித்துகொலை ..போலீசின் உதவியுடன் ஆணவ கொலை

kathir.vincentraj? மதுரை - பேரையூர் அருகில் உள்ள வீராளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகன்யா.அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் ஈரோடு அருகில் சித்தோடு பகுதியை சேர்ந்த பூபதி என்பவரும் காதலித்து வந்து உள்ளனர்.இந்த காதலுக்கு சுகன்யாவின்குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததனால் கடந்த ஜனவரி 2017 மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.பூபதி நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.கடந்த ஏப்ரல் மாதம் பூபதியிடம் சுகன்யா குடும்பத்தினர்,இங்கு கோவில் திருவிழா நடைபெறுகிறது,அவசியம் வரவேண்டும் என்று அழைப்புவிடுததனால் காதல் தம்பதியினர் வீராளம்பட்டி கிராமத்திற்கு வந்தனர்.அங்கு சுகன்யாவின் குடும்பத்தினர் பூபதியை விரட்டி அடித்துவிட்டு சுகன்யாவை பிடித்து வைத்து உள்ளனர்.இது குறித்து சேடப்பட்டி காவல் நிலையத்தில் பூபதி புகார் அளித்து உள்ளார்.மீட்டு தருகிறோம் என்று போலீஸ் உறுதி அளித்து உள்ளனர்.இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுகன்யாவை அவரது தந்தையும் உடன்பிறந்தவர்களும் கொலை செய்து எரித்து உள்ளனர்.இது அப்பட்டமான சாதிய ஆணவ கொலை.இந்த சம்பவத்தில் மூன்று நிலைகளை கூற விரும்புகிறேன்.

1.நாட்டில் எத்தனை ஆணவ கொலை நடக்கின்றன.முட்டாள்தனமாக பெண்ணின் குடும்பத்தினர் அழைத்தார்கள் என்று பூபதியும் சுகன்யாவும் சென்றது ஏற்புடையது அல்ல.இது போன்ற கொலைகார குடும்பங்கள் பாசமாக தென் ஒழுக பேசுவார்கள்.இந்த பசப்புவார்த்தையை நம்பி போக கூடாது அல்ல போகவே கூடாது.
2.சேடப்பட்டி ஏரியாவில் தேவர் சமூகம் ஆதிக்கம் மிக்க சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.இங்கு உள்ள காவல் நிலையமும் தேவர் சமூகத்திற்கு ஆதரவான காவல் நிலையம்.ஒரு கணவன் தன்னுடைய மனைவியை கொலை செய்து விடுவார்கள் என்று பதறி அடித்து கொண்டு புகார் தெரிவித்தால் பொலிஸ் படையை அனுப்பி மீட்டு இருக்க வேண்டாமா? பெண்ணின் குடும்பத்தினரிடம் கடந்த 25 நாட்களாக விசாரித்து கொண்டுதான் இருந்தோம்.பெண்ணை மறைத்து வைத்து கொண்டு நாடகம் ஆடுகிறார்கள் என்று கருதினோம்.ஆனால் இப்படி கொலை செய்வார்கள் என்று தெரியாது போலீஸ் கூறுவது கேவலமாக இருக்கிறது.எங்களது விசாரணையில், பெண்ணின் குடும்பத்தினரிடம் போலீஸ் கெஞ்சி இருக்கின்றனர்.பெண்ணை மனசு மாற்றி அழைத்து வாருங்கள்.நாங்களே பிரித்து வைக்கிறோம் என்றும் கூறி இருக்கின்றனர்.

இந்த கொலைக்கு மதுரை மாவட்ட போலிஸ்தான் முக்கிய குற்றவாளிகள்.எஸ்.பி.டி.எஸ்.பி.சம்பந்தப்பட்ட போலீஸ் உள்பட எல்லோரும் உடனடியாக பனி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
3.சில ஆணவ கொலைகள் நடந்து இரண்டு வருடம்,மூன்று வருடம்,ஒரு மாதம் என்று காலதாமதமாகத்தான் வெளியே தெரிகிறது.ஆக பல கொலைகள் மறைக்கப்படுகின்றன.பல கொலைகள் சந்தெக மரணமாக,தற்கொலையாகவே பதிவு செய்யப்படுகின்றன.இதற்கு எதிராக வலுவான நீதி,காவல்,மருத்துவம் இணைந்த கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு அதன் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: