பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் உள்ள
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம் இன்று அதிகாலை சுமார் 3.30
மணியளவில் அந்த விமான தளத்துக்குள் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவினர்.
இதை கண்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை எச்சரிக்கும் விதமாக
துப்பாக்கிகளால் சுட்டனர். ஆயுதங்களுடன் வந்திருந்த தீவிரவாதிகளும்
பதிலுக்கு துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினரிடையே நெடுநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு
தீவிரவாதிகளை விமானப்படையை சேர்ந்த பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.
பஞ்சாப்பில் ஆதிக்கம் செலுத்திவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்றைய தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
பதான்கோட் விமானப்பட தளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி.-21 மற்றும் எம்.ஐ.-25 ரக ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. போர்காலங்களில் பயன்படுத்தப்படும் இவ்வகை ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படும் விமானப்படை தளத்தின் பின்பகுதியில் தைலம் மரங்கள் வளர்ந்திருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. நேற்று பின்னிரவு இந்த காட்டுப்பகுதி வழியாக உள்ளே ஊடுருவிய தீவிரவாதிகள் இன்று அதிகாலை இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உள்ளே நுழைந்து சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு தீவிரவாதிகள் தவிர, மேலும் சில தீவிரவாதிகள் அருகாமையில் இருக்கும் காட்டுப்பகுதிக்குள் பதுங்கி இருக்கக்கூடும் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, அந்த காட்டுப்பகுதிகளுக்கு மேலே எம்.ஐ.ஜி.-21 மற்றும் எம்.ஐ.-25 ரக ஹெலிகாப்டர்களில் பறந்தவாறு பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக