சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் உள்ள தங்கள் நாட்டு தூதரம்
மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. சவுதி அரேபியா, சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் அண்மையில் மரண தண்டனையை நிறைவேற்றியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஈரானில் போராட்டம் வெடித்தது, ஈரானில் சவுதி தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் உடனான உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது. இவ்விவகாரத்தில் சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்த நாடுகள் சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக ஈரானில் இருந்து தங்களது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து வருகிறது.
ஏமனில் ஹவுதி கிளைச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தி வருகிறது. சனாவில் கூட்டணிபடை போர் விமானங்கள் நேற்று இரவு கடும் தாக்குதல்களை நடத்தியது, சவுதி அரேபியாவின் மீது தாக்குதல் நடத்த, ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை லாஞ்சர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் உள்ள தங்கள் நாட்டு தூதரம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தகவலை ஈரான் நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது. இருப்பினும் சவுதி தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் உடனடியாக வரவில்லை.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் போர் முயற்சிகளுக்கான ஆதரவை திட்டவட்டமாக ஹவுதி மறுத்துள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக