முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீடு மனு மீதான வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர்
மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை
எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும்
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும்
எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி
சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு
மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதிகள்,
''இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர்
அன்பழகன் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும்
இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதி துறையை மக்சிமம் வளைத்து நெளித்து உடைத்த ஒரு கோஷ்டியின் வழக்கை மைக்கிராஸ்கோப்பால்தான் பார்க்கவேண்டி இருக்கிறது. இதில் எதோ அவசரம் தெரிகிறதே
வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பினரும் இறுதிவாதம் தொடர்பான தொகுப்பை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும்’’என தெரிவித்து, வழக்கை ஜனவரி 8-ம் தேதி ஒத்திவைத்தனர்.
இதனிடையே, கர்நாடாக, திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. வழக்கை தினந்தோறும் விசாரிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீடு மனு மீதான வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு பதிலாக நீதிபதி அமித்தவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளது.
இதனிடையே, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின், உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியதை அடுத்து, இந்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பான இறுதி பட்டியலை உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அலுவலகம் நேற்று வெளியிட்டது.
அதில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் 8-ம் தேதி நடைபெறாது என்று பதிவுத்துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக