மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக நான் போட்டியிட வேண்டும் என
தொண்டர்கள் விரும்பினால் அதை ஏற்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தெரிவித்தார்.மதுரை மண்டல மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று
நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சிவகங்கை மாவட்டச்
செயலாளர் புலவர் செல்வந்தியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசு ம்போது “மக்கள்
நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருக்கும், தாங்கள் முதல்வர் வேட்பாளராக
வேண்டும்.
வழக்கம்போல் யாருக்கும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என
வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதில் அளித்த வைகோ பேசும்போது, “எனக்கு எந்த
ஆசையும் இல்லை. உங்கள் கட்டளையை ஏற்கிறேன். மறுப்பும் சொல்ல முடியவில்லை
என்றதும் அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து வைகோ பேசி யதாவது:
திமுகவுடன் கூட்டணி சேராவி ட்டால் அதிமுகக்கு ஆதரவாகச் செயல்படுவதாக
அர்த்தமாகாது. மக்கள் நலக் கூட்டணியைக் கண்டு கருணாநிதி அஞ்சுகிறார்.
அதனால், மதிமுக கட்சியை இல்லாமல் ஆக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.
மதிமுகவை முற்றிலும் அழிக்க நினைக்கும் திமுகவை ஒருபோதும் ஆட்சிக்கு வர
விடமாட்டோம். அதே நேரத்தில், அதிமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றாமல்
விட மாட்டோம். இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி, இந்த
முறை ஆட்சிக்கு வரும். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளையும்
பிரிக்க திமுக முயலுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நான்கு கட்சிகளும்
தனித்தனியாக போய்விடுவர் என திட்டம் போட்டு, ஊடக விவாதங்களில் கருணாநிதி
பேச வைக்கிறார். மக்கள் நலக் கூட்டணியை தேர்தலில் சந்திக்க திமுகவுக்கு ஏன்
தயக்கம். தேர்தலை நான்கு கட்சிகளும் சேர்ந்து சந்திப்போம். மற்ற
கட்சிகளும் விரைவில் வரவுள்ளனர். கடந்த காலத்தில் கட்சியை காப்பாற்ற சில
தவறான முடிவுகளை நான் எடுத்தேன். இனி அந்த தவறு ஒதுபோதும் நடக்காது.
தற்போது தமிழகத்தை காப்பாற்றவே மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளோம்.
இந்தக் கூட்டணி அவசர கோலத்தில் அமைக்கப்பட்டதில்லை என்றார்.
முன்னதாக கூட்டத்துக்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார்.
ஆட்சிமன்றக் குழு செயலாளர் ஈரோடு கணேசமூர்த்தி, கொள்கை விளக்கச் செயலாளர்
அழகு சுந்தரம் முன்னிலை வகித்தனர். மாநகர் செயலாளர் புதூர் பூமிநாதன்
வரவேற்றார்.
திமுகவை இயக்குபவர் யார்?
வைகோ மேலும் பேசும்போது, “மக்கள் நலக் கூட்டணி அமைவதற்கு முன் கருணாநிதி
அவரது குடும்பத் திருமண விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். நான் அவரது
அழைப்பை பாசமாக நம்பி, அந்த விழாவுக்குச் சென்றேன். அங்கு சென்றபிறகுதான்
மதிமுகவை அழிக்க கருணாநிதியும், அவரது மகன் ஸ்டாலினும் திட்டமிட்டிருந்தது
தெரியவந்தது. அதனால், அவர்களை விட்டு உடனடியாக விலகினேன். தற்போது
எம்.எல்.ஏ. ‘சீட்’ ஆசைக்காட்டி மதிமுக நிர்வாகிகளை இழுக்கிறார்கள். அவர்கள்
பின்னால் ஒரு மதிமுக தொண்டன் கூட செல்ல மாட்டார்.
அண்ணா தொடங்கிய திமுகவை, தற்போது அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலினின்
மருமகன் இயக்குகிறார். இதைவிட, திமுகவுக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்
என்றார். //tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக