பார்ப்பனர்கள் அர்ச்சனை செய்தால் நாங்கள் கோவிலுக்குள் நுழைய மாட்டோமென்று மற்ற ஜாதியினர் அனைவரும் சேர்ந்து கோவிலுக்குப் போவதை நிறுத்திவிடுங்களேன். பிறகு கொஞ்சநாளில் வருமானமில்லாமல் அந்தப் பூனைகள் தானாகவே வெளியேறிவிடும்.
அவன் ஆகம விதி என்று பொய் புளுகி உள்ளே நுழைகிறான். இவையெல்லாம் எங்களுக்கு ஆகாத விதிகள் என்று நாம் அவர்களை விலக்கி வைத்து விளக்கவேண்டும். தக்க நேரம் இது. இப்போதாவது யோசியுங்கள். நாத்திகம் பேசுவாள் இவளுக்கென்ன என்று எப்போதும் போல் இருந்துவிட வேண்டாம்.
------ லதாராணி
சிவனும் முருகனும் தமிழ் கடவுள்கள்...
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
- இதை எழுதினது சிவனென்றும்
சிவனும் முருகனும் தமிழ் கடவுள்கள்...
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
- இதை எழுதினது சிவனென்றும்
சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று என் அறிவிற்கு
சுட்டிக்காட்டிய தமிழ்ப் பெருங் கடலே ன்னு அவ்வைப்பாட்டி முருகனைப்
பார்த்துப் பாடினார் என்றும் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துள்ளோம்.
இப்படி தமிழில் விளையாடிய அப்பாவும் மகனும் சமஸ்கிருதம் கற்றது எப்போது?
இவர்களிருவரும் சமஸ்கிருதம் கற்றதாக எந்த இலக்கியத்திலும் சொல்லியதாகத்
தெரியவில்லை. அப்படி இருக்க சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால்
இவர்களுக்குப் புரியுமா?
சரி இது இப்படியே இருக்கட்டும் .... தமிழகக் கோவில்களைப் பற்றி முதலில் பார்ப்போம்
தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது இராஜராஜ சோழன்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைக் கட்டியது குலசேகர பாண்டியன்
திருப்பதி தேவஸ்தானம் கட்டியது தொண்டைமான்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலைக் கட்டியது சின்ன பொம்மு நாயகா - விஜய நகர பேரரசன்
திருவண்ணாமலை கோவிலை கிருஷ்ண தேவராயர் கட்ட ஆரம்பித்து சிவப்பா நாயகாவால் முடிக்கப்பட்டது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைக் கட்டியது குலசேகர பாண்டியன்
திருப்பதி தேவஸ்தானம் கட்டியது தொண்டைமான்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலைக் கட்டியது சின்ன பொம்மு நாயகா - விஜய நகர பேரரசன்
திருவண்ணாமலை கோவிலை கிருஷ்ண தேவராயர் கட்ட ஆரம்பித்து சிவப்பா நாயகாவால் முடிக்கப்பட்டது
இப்படி எந்த கோவிலை எடுத்தாலும் அவை தமிழகத்தை ஆண்ட மன்னர்களாலே
கட்டப்பட்டவைகள் என்பது தெளிவாக விளங்க இந்த கோவில்களுக்குச்
சொந்தக்காரகளாக அனைத்து உரிமையும் உள்ளவர்கள் தமிழர்களே/திராவிடர்களே
என்பதை தனியாக விளக்கத் தேவையில்லை. (வடவேங்கடம் முதல் தென்குமரி வரை
எல்லையாகக் கொண்டிருந்தது நம் தமிழகம்)
இப்படி தெருமுனையிலிருந்து தலைநகர் வரை அளவிறந்த பொருட்செலவும்
உடலுழைப்பும் நம்மால் கொட்டிச் செய்யப்பட்ட கோவில்களெல்லாம் ஆரிய
பார்ப்பனர்கள் கொட்டமடிக்கும் கோபுரங்களாக மாறியது மட்டுமன்றி கருவறைக்குள்
செல்லும் அனுமதி நமக்கு மறுக்கப்படுவதை வெளியே இருந்து வேடிக்கை
பார்ப்பவர்களாக மாறிவிட்டோம்.
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகராகலாம் என்ற உயர் நீதி மன்ற தீர்பிர்க்குப் பிறகு அனைத்து ஜாதியைச்
சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழக அரசின் ஆகம பயிற்சிகளை
முடித்துவிட்டும் அனுமதி மறுக்கப்பட்டு நிற்கிறார்கள் .
தற்போது உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இந்தியா மத சார்பற்ற நாடு ஆனால் சாதி சார்புள்ள அரசுஎன்று கூறுவதுபோல் அல்லவா உள்ளது?.
நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு;
"இந்து ஆகம விதிகளின் படி கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். பிறப்பின் அடிப்படையில் ஏற்பட்ட எந்தவொரு சாதியைச் சார்ந்தும் அர்ச்சகர்கள் நியமனம் இருக்கக் கூடாது. ஒரு சில கோயில்களில் அர்ச்சகர் நியமனத்தின்போது, குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம்" என்று கூறியுள்ளனர்.
"இந்து ஆகம விதிகளின் படி கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். பிறப்பின் அடிப்படையில் ஏற்பட்ட எந்தவொரு சாதியைச் சார்ந்தும் அர்ச்சகர்கள் நியமனம் இருக்கக் கூடாது. ஒரு சில கோயில்களில் அர்ச்சகர் நியமனத்தின்போது, குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம்" என்று கூறியுள்ளனர்.
அப்படியெனில் "குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு ஆட்சேபனை இருந்தால்...நீதி
மன்றத்தை அணுகலாம்?" - இந்த சூட்சுமம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் சொன்னது ஆகம விதி பயின்றவர்கள் மட்டுமே அர்ச்சனை செய்ய
வேண்டுமென்று. இதென்ன ராக்கெட் சயின்சா இதோ படித்துவிட்டோமென்று மற்ற
ஜாதிக்கார இளைஞர்கள் வந்து நிற்கும் போது உள்ளே நுழையவிடாமல் தடுப்பது
வாடகை வீட்டுக்காரனை வெளியேற்றி விட்டு நம் சொந்த வீட்டில் நாம் குடியேற
நீதிமன்றம் படிஏறி இறங்குவது போல் உள்ளது.
கட்டிய வீட்டிற்குள் புகுந்த கருநாகம் போல நாடோடிகள் ஆக்கிரமித்த நிலம் போல
நம்முடைய முன்னோர்கள் கட்டிய கோவில்ககளையெல்லாம் ஆரியர்கள்
ஆக்கிரமித்துக்கொள்ள இப்போது நம் வீட்டிற்குள் நுழைய நாம் அனுமதி
கேட்டுக்கொண்டு இருக்கிறோம். வெட்கக் கேடு.!
இதைவிட... பார்ப்பனர்கள் அர்ச்சனை செய்தால் நாங்கள் கோவிலுக்குள் நுழைய
மாட்டோமென்று மற்ற ஜாதியினர் அனைவரும் சேர்ந்து கோவிலுக்குப் போவதை
நிறுத்திவிடுங்களேன். பிறகு கொஞ்சநாளில் வருமானமில்லாமல் அந்தப் பூனைகள்
தானாகவே வெளியேறிவிடும்.
அவன் ஆகம விதி என்று பொய் புளுகி உள்ளே நுழைகிறான். இவையெல்லாம் எங்களுக்கு
ஆகாத விதிகள் என்று நாம் அவர்களை விலக்கி வைத்து விளக்கவேண்டும். தக்க
நேரம் இது. இப்போதாவது யோசியுங்கள். நாத்திகம் பேசுவாள் இவளுக்கென்ன என்று
எப்போதும் போல் இருந்துவிட வேண்டாம்.
------ லதாராணி latharaniyinsorchithirangal.blogspot.ca/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக