400 ரயில் நிலையங்களை பராமரிக்கும் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நிதி ஆதாரங்களை பெருக்கும் பணியில் ரயில்வேத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் ரயில் நிலைய பராமரிப்பும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதற்காக 400 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் அந்த ரயில் நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்கும். சிரிய மற்றும் நடுத்தர விமான நிலைங்களை பராமரிக்கும் பொறுப்பையும் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை செய்யப்ப்டடு வருகிறது என்று தெரிவித்தார்.nakkheeran,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக