சென்னை: திமுகவுடன் தேமுதிக கை கோர்க்கும் நிலையில் மக்கள் நலக்
கூட்டணி, அதிமுகவு கூட்டணியில் ஐக்கியமாகிவிடலாம் என்று மதிமுக
பொதுச்செயலர் வைகோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.
பாண்டியன் இழுத்துக் கொண்டிருக்கிறாராம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள், கூட்டணி
அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக தேமுதிகவை வளைப்பதில்
திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை மும்முரம் காட்டி வருகின்றன.
ஆனாலும் பாஜக, மக்கள் நலக் கூட்டணிக்கு டாடா காட்டும் மூடில்தான்
விஜயகாந்த் இருந்து வருகிறார். இதனை உணர்ந்தே மக்கள் நலக் கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளர் வைகோ, விஜயகாந்த்தை குட்டு வைத்து விமர்சித்துக்
கொண்டிருக்கிறார் திருமாவளவன் என்னவோ திமுக மீது நம்பிக்கை இழந்துதான் காணப்படுகிறார்,மீண்டும் காலை வாரிடு...
திமுக- தேமுதிக
தேமுதிகவைப் பொறுத்தவரையில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் கணிசமான
இடங்கள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பல லாபம் இருப்பதாக கணக்குப்
போடுகிறது. இதனால் திமுகவும் விஜயகாந்த்துக்கு இணக்கமாகவே இறங்கி
செயல்பட்டு வருகிறது.
சிறுத்தைகள் தாவல்?
கிட்டத்தட்ட விஜயகாந்த் திமுக பக்கம் போய்விடுவார் என்பது உறுதியாகி
இருக்கிறது. அப்படி திமுக, தேமுதிக, காங்கிரஸ் இணைந்து மெகா கூட்டணி
உதயமானால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகளும் கூட திமுக
பக்கம் தாவக் கூடும் எனக் கூறப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் பேசாமல் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய
கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக ஆகியவை என்ன செய்வது
என தெரியாமல் விழிபிதுங்கி போயுள்ளனர். இது குறித்து வைகோவிடம் பேசிய
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், அப்படி தேமுதிக-
திமுக கூட்டணி அமைந்தால் பேசாமல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள்
நலக் கூட்டணி இணைந்துவிடுவதுதான் நல்லது என ஆலோசனை கூறியிருக்கிறார்.
வைகோ இதை மவுனமாகக் கேட்டுக் கொண்டு, அப்படி ஒரு நிலைமை வருமான்னு
தெரியலை.. வரும்போது பார்க்கலாமே என்றாராம்... தா.பா.வைப் பொறுத்தவரையில்
எதற்கு இந்த மக்கள் நலக் கூட்டணி? அதிமுகவை வெளிப்படையாக ஆதரிக்கலாமே
என்பதுதான் தொடக்கம் முதலே மேற்கொண்டு வரும் நிலைப்பாடு. ஆகையால் எப்படி
இடதுசாரிகளையும் மதிமுகவையும் அதிமுக அணிக்கு கொண்டு சேர்ப்பதில் தா.பா.
படு தீவிரமாக இருக்கிறாரம்... //tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக