வெள்ளி, 22 ஜனவரி, 2016

புவனகிரி MLA செல்வி ராமஜெயம் வட்டசியரை வறுத்தெடுக்கும் ஆடியோ



சிதம்பரம் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டு புவனகிரி தனி தாலுகாவாக சில மாதங்களுக்கு முன்புதான் ஜெயலலிதா துவக்கிவைத்தார். புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் வட்டாட்சியராக ராஜவேல் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் செவ்வாய்கிழமை ராஜவேல் பணியில் இருந்துள்ளார். புவனகிரி அதிமுக பெண் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம், வட்டாட்சியரை செல்போனில் தொடர்பு கொண்டு வெள்ள நிவாரணம் வழங்குவது குறித்து கேட்டுள்ளார். அப்போது வட்டாட்சியரை எம்எல்ஏ கடுமையான வார்த்தையால் ஒருமையில் திட்டியுளளார்.

இதுபற்றி வட்டாட்சியர் ராஜவேல், சக ஊழியர்களிடம் கூற, வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் வருவாய்தறை ஊழியர் சங்கத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2 மாதமாக கடுமையாக பணியாற்றி வரும் வட்டாட்சியரை திட்டியதை கண்டித்தும், செல்வி ராமஜெயம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு செவ்வாய் மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்துறை ஊழியர்கள் சங்க புவனகிரி வட்ட தலைவர் அமர்நாத் தலைமை தாங்கினார்.
சிதம்பரம் வட்ட தலைவர் தமிழ்ச் செல்வன், வட்டாட்சியர்கள் புவனகிரி ராஜவேல், சிதம்பரம் அரங்கநாதன் உள்ளிட்ட ஊழியர்கள் சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அதிமுக எம்எல்ஏவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், நியமாக பணியாற்றிய புவனகிரி வட்டாட்சியரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் எம்எல்ஏ திட்டியது ஏற்கத் தக்கது அல்ல. பல்வேறு சுமைகளோடு பணிகளில் ஈடுபட்டவரை திட்டியது தவறு. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களோடு பொது நல அமைப்புகளும் சேர்ந்து கடுமையாக பணியாற்றி உள்ளனர். ஆனால் இப்படி நடந்த சம்பவத்துக்கு எம்எல்ஏ புதன் மாலைக்குள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தெரிவிக்காவிட்டால் மாவட்ட அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் என்றனர். இந்த விவகாரம் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மத்தியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் காளி. nakkheeran,in

கருத்துகள் இல்லை: