திங்கள், 18 ஜனவரி, 2016

பிரான்சில் பொருளாதார அவசர நிலை பிரகடனம்

பிரான்சில் சமூக, பொருளாதார கட்டமைப்பை மாற்றுவதற்கான நேரம்
வந்துவிட்டதாகவும், பொருளாதார அவசர நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார். பாரிசில் இன்று நடந்த தொழிலதிபர்களுடனான ஆண்டுக் கூட்டத்தில் இதுபற்றி பேசிய அவர், பிரான்சில் நிலவி வரும் கடுமையான பொருளாதார பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை போக்குவதற்கான பல்வேறு பொருளாதார மீட்சி திட்டங்களை வெளியிட்டார். குறிப்பாக, தொழிலாளர்களை அரவணைத்து செல்லக்கூடிய தொழில் கொள்கைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவான முறையில் புதிய பயிற்சிகளை வழங்கவும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும் புதிய திட்டங்களை அறிவித்தார்.


ஆன்லைன் பொருளாதாரம், உலகளாவிய அதிவேக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடைய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த புதிய பொருளாதார சீர்திருத்தங்களை பொருளாதார அவசர நிலை பிரகடனமாக கருதுவதாகவும் அதிபர் ஹாலண்டே தெரிவித்தார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: