செவ்வாய், 19 ஜனவரி, 2016

சொத்து குவிப்பு....16 அம்சப்பட்டியல் சுப்ரீம் கோட்டில் கர்நாடக அரசு தாக்கல்

சொத்து குவிப்பு வழக்கில் 16 அம்சங்கள் கொண்ட பட்டியல்: சுப்ரீம்கோர்ட்டில்
கர்நாடகா தாக்கல் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் ஒவ்வொரு தரப்பும் வாதிட உள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பின் 16 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.


இந்த மனு நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வராய் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கணிதப் பிழைகள் உள்ளன.

கணிதப் பிழையால் சொத்துக்களின் மதிப்பு 8.12 சதவீகிதம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் கணக்கீட்டு பிழையை சரி செய்தால் சொத்து மதிப்பு 76.7 சதவிகிதமாக உயரும். இந்த தவறுகளை சரி செய்தால் விடுதலை செய்த நிலைமாறி தண்டனை தீர்ப்பாக மாறிவிடும். நிறுவனங்கள் வாங்கிய சொத்துக்கள் குற்றவாளிகளின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

 147 அசையா சொத்துக்களுக்குப் பதிலாக 97 மட்டுமே கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டிடங்களின் மதிப்பு, சுதாகரன் திருமணச் செலவு உள்ளிட்டவை குறைவாக கணக்கிடப்பட்டுள்ளன. சட்டத்திற்குப் புறம்பாக வந்த பிறந்த நாள் பரிசான ஒன்றரை கோடி ரூபாயை வருமான கணக்கில் நீதிபதி தவறாக சேர்த்துள்ளார். விசாரணை நீதிமன்றம் ஆய்ந்து அளித்த தீர்ப்பு, சட்டத்திற்குப் புறம்பாக மாற்றப்பட்டுள்ளது.

நீதிபதி தனது கடமையில் இருந்து தவறிவிட்டார். அரசு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வ வாதத்தை அளிக்க போதிய கால அவகாசம் வழங்கவில்லை. அவருக்கு வாதாட வாய்ப்பு அளிக்காதது இயல்பான நீதிக்கு முரணானது. ஆதாரப்பூர்வ ஆவணங்களைப் புறக்கணித்து தீர்ப்பு வழங்கியது சரிதானா என்று கூறப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்த மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். nakkheeran,in

கருத்துகள் இல்லை: