பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில்
அமைந்திருக்கும் சார்சத்தாவில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தின் மீது
துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டும் 50 பேர்
காயமடைந்தும் உள்ளனர்.
பச்சா கான் பல்கலைக்குள் நுழைய முயன்ற இவர்கள் குறைந்தது மூன்று பேரையாவது காயப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிக்கும் சத்தமும் கேட்டதாக இந்தச் சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சார்சத்தா நகரம் பெஷாவரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.
உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் பயங்கரவாதிகள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததாக ஜியோ தொலைக்காட்சிக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டு, காவல்துறை அதனைச் சுற்றிவளைத்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு அதிகாரிகள் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தனர் bbc.tamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக