புதன், 20 ஜனவரி, 2016

அமெரிக்காவில் சீக்கியர் - 3 முஸ்லிம் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்

அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர் ஷான் ஆனந்த். கடந்த மாதம் இவர் கனடாவின் டொரண்டோவில் இருந்து நியூயார்க் நகருக்கு அமெரிக்க ஏர்லைஸ் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் முஸ்லிம் நண்பர்கள் பைமுல் ஆலம் உள்ளிட்ட 3 பேரும் இருந்தனர். இவர்களில் பைமுல் ஆலம் தவிர 2 பேர் வங்காள தேசம் மற்றும் அரேபியநாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.  4 பேரும் விமானத்தில் ஏறி தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர். ஆனந்தும், ஆலமும் திடீரென இருக்கை மாற்றி அமர வைக்கப்பட்டனர். அதன் பின்னர் வெள்ளைக்கார விமான பணிப்பெண் வந்து ஆனந்துடன் வங்காள தேசத்தை சேர்ந்த முஸ்லிம் பயணியை விமானத்தில் இருந்து வெளியேறும்படி கூறினார். இது குறித்து அவர்கள் காரணம் கேட்டனர்.


தற்கு அவர் கறுப்பாகவும், தாடியும் வைத்துள்ளார். பார்க்கவே பயமாக இருக்கிறது. எனவே அவர் வெளியேற வேண்டும் என்று விமானி தெரிவிக்கிறார். இல்லாவிட்டால் விமானத்தை ஓட்ட மறுத்து விட்டார் என்றார். இதனால் விமான ஊழியர்களுக்கும், ஆனந்த் உள்ளிட்ட 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் ஆனந்த், பைமுல் ஆலம் உள்ளிட்ட 4 பேரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு விமானம் புறப்பட்டு சென்றது.

இது குறித்து இவர்கள் 4 பேரும் புரூக்ளின் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், தாங்கள் இனவெறி காரணமாக அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும், அதற்காக அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ரூ.60 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.   மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: