தானே,ஜன.23 (டி.என்.எஸ்) மும்பையில் கைதான போதை பொருள் கும்பலிடம் போலீஸ்
நடத்திய விசாரணையில், அவர்களிடம் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களில் 60
சதவீதம் பேர் கால் சென்டரில் பணிபுரிபவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.கடந்த
புதன்கிழமை தானே மாவட்டத்தில் உள்ள மும்புரா நகரில் அல்தாப் ஆருண் (32)
என்ற போதை மருந்து வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த
தகவலை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் இன்று
சையது சிக்கந்தர் (21), முகமது ஜாகித் (23) என்ற இரண்டு பேரை கைது
செய்தனர். அவர்களிடமிருந்து 15,000 ரூபாய் மதிப்புள்ள 30 கிராம் எடை கொண்ட
மெபெட்ரோன் எனும் போதை மருந்தை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் ஆருணிடமிருந்து போதை மருந்தை வாங்கி விற்றதாக கூறினர். மேலும், தானே மாவட்டத்தில் உள்ள பல்வேறு சந்திப்புகள் மற்றும் சதுக்கங்களில் 1 கிராம் பாக்கெட்டுகளாக போதை மருந்து விற்றதாகவும் தங்களது 60 சதவீத வாடிக்கையாளர்கள் கால் சென்டரில் வேலை செய்பவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தானே மாவட்ட காவல்துறையினர் பள்ளி, கல்லூரி மற்றும் கால்சென்டர்களுக்கு அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். chennaionline.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக