திட்டு வரும் கண்ட னங்கள் வரும்.. விருது வந்திருக்கிறது
‘எழுத்துப் போராளிக்கு பெரியார்
விருது!’ என்று தலைப்பிட்டு ‘விடுதலை’ என்னை கவுரவித்திருக்கிறது. நன்றி
:ஆசிரியருக்கும் – கவிஞருக்கும்.
தொடர்ந்து எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு,
தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். முன்னதாக
அவரைப்பற்றிய ஒளிப்படக் காட்சி திரையிடப்பட்டது.
தொடர்ந்து வே. மதிமாறன் ஏற்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், தான் எழுத்தாளர் ஆவதற்கு முக்கியக் காரணம் பேராசிரியர்
சுப. வீரபாண்டியன்தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பிறகு, பெரியார் மாதிரி பேசினால் திட்டு
வரும். கண்ட னங்கள் வரும். இப்பொழுதுதான் விருது வந்திருக்கிறது என்று
பலத்த கைதட்டல்களுக்கிடையில் கூறிவிட்டு, பெரியாரை எதிர்க்கின்றவர்களை
நன்றாக விமரிசனம் செய்.உனக்குப் பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என்று
கூறுவதாகத்தான் இந்த விருதை எனக்கு அளித்ததாக தான் பார்க்கிறேன் என்று
சொல்லிவிட்டு,
அதன்படியே தன் பணி இருக்கும் என்று கூறி,
பேராசிரியரிடம் அடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது, தீபாவளிக்கு
வழங்கும் ஊக்கத் தொகையை பொங்கலுக்குத் தரவேண் டும் என்ற வேண்டுகோளோடு தனது
உரையை முடித்துக்கொண்டார்.
-விடுதலை 17-1-2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக