தமிழ் மக்களின் அடிமைத்தனத்துக்கு தீனி போட ஒரு அதிமுகவால் முடியுமா என்ற சந்தேகம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.அதன் காரணமாக மேலும் பல தமிழர்களின் அடிமைபுத்தியை பேணி பராமரிப்பதற்கு வசதியாக திமுகவிலும் அதிமுகவை போலவே காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறக்கூடிய வாய்ப்பை கழக தொண்டர் மற்றும் குண்டர்களுக்கு வழங்கி உள்ளார். இந்த பாத நமஸ்கார ஆசனம் பந்தம் பிடித்து முன்னேற நல்லது.அது மட்டுமல்ல ஸ்டாலினுக்கும் மனதில் ஏற்படும் விகாரங்களுக்கும் நல்ல மருந்தாக பயன்படும் என்றும் தெரிகிறது. இப்படிதானே ஜெயலலிதாவும் தனது ஈகோவுக்கு தீனி போடுகிறார்? இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே பிறர் தமது கால்களில் விழுந்து வணங்கும் போது மிகவும் மகிழ்சியாக இருப்பதுதான் ,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக