டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், மேற்கு வங்க
மாநில கலாசார ஊர்திக்கு வாய்ப்பு அளிக்குமாறு விடுத்திருந்த கோரிக்கையை
மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி
குற்றம்சாட்டியது.இதுகுறித்து, அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளரும்,
பார்லிமென்ட் உறுப்பினருமான டெரிக் ஓ பிரையன்
கூறியதாவது:பெண் கல்வி முன்னேற்றத்திற்காக மேற்கு வங்க அரசு செயல்படுத்திய திட்டத்தை, கடந்தாண்டு நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டில் யூனிசெப் அமைப்பு இடம்பெறச் செய்தது.அந்த திட்டத்தை விளக்கும் கலாசார ஊர்தியை குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அதனை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக பிரையன் தெரிவித்தார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க., செய்தித் தொடர்பாளர் நரசிம்மா தெரிவித்ததாவது: குடியரசு தின விழா அணிவகுப்பில் எந்தெந்த மாநிலங்கள் பங்குபெற வேண்டும் என்பதை, பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான குழுதான் முடிவு செய்கிறது.இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்படுவதில்லை என நரசிம்மா தெரிவித்தார்
மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா கூறும்போது, இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சிறுபிள்ளைத்தனமான கண்ணோட்டம் தான் தெரிகிறது dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக