மத்திய முன்னாள் மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில்
முக்கிய விவரங்களை சேகரிப்பதற்காக இன்று முன்னாள் எம்.பி. அமர்சிங்கிடம்
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
சுனந்தா கொல்லப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன் அமர்சிங்கை தொடர்பு
கொண்டு, ஐ.பி.எல். சிக்கல் குறித்து பேசியுள்ளார். எனவே, சுனந்தா கொலைக்கு
ஐ.பி.எல். பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்த
முடிவு செய்ததன் அடிப்படையில் புலனாய்வு குழு அமர்சிங்குக்கு சம்மன்
அனுப்பியிருந்தது.
அதன்படி இன்று விசாரணைக்கு ஆஜரான அமர் சிங்கிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் 20 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணை குறித்து விரிவான விளக்கம் எதையும் கூற அமர்சிங் மறுத்துவிட்டார்.
“நான் இப்போது அளித்துள்ள வாக்குமூலம், காவல்துறை விசாரணையின் ஒரு பகுதிதான். சுனந்தாவும் சசி தரூரும் எனக்கு நல்ல நண்பர்கள். நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. இந்த வழக்கில் எனக்குத் தெரிந்த அனைத்தையும் விசாரணை அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். உண்மை வெளிவரவேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன்” என்று அமர்சிங் கூறினார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக