நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த பி.கே. திரைப்படம்
இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது. எனினும், வசூலில் சாதனை
படைத்தது. இந்நிலையில், சீனாவின் மிகப்பெரிய அரசு திரைப்பட நிறுவனமான China
Film Group Corporation (CFGC) பி.கே. படத்தின் இயக்குனர் ராஜ்குமார்
ஹிரானிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பை ஏற்று பெய்ஜிங் சென்ற
ராஜ்குமார் அங்கு இரண்டு மாதங்களுக்குள் பி.கே. படத்தை 3500
திரையரங்குகளில் வெளியிடுவதற்கான Sino-India Mutual Film Importation
Agreement என்ற ஒப்பந்தத்தை முறைப்படி நிறைவேற்றுவதற்கான பணிகளில்
ஈடுபட்டார். அமெரிக்காவுக்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய திரைப்பட சந்தையாக
சீனா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 34 வெளிநாட்டு படங்கள் அங்கு ஹாலிவுட்
பிளாக்பஸ்டராக வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் ஹிந்தி படங்கள் ஹாலிவுட்
பிளாக்பஸ்டர் ரெக்கார்டை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், இந்த
புதிய ஒப்பந்தத்தின்படி CFGC நேரடியாக பி.கே திரைப்படத்தை இறக்குமதி செய்து
சீனாவின் திரையரங்குகளில் ஒளிபரப்புகிறது. thenee.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக