லோகாஸ்ட் பிளாஸ்டிக், மலிவான காது குடை பஞ்சு ( ஆஸ்பத்திரி வேஸ்ட் பளிச்
பண்ணியதாம்), ஹேர் பேண்ட் (கண்டம் ரீமக்காம்) , இப்படி எல்லாவற்றிலும்
சீப் ஐடம்சை டம்ப் செய்யுதே. மருந்தெல்லாம் எக்கச்செக்க கய்யூட்டடித்து
உள்ளூர் தயாரிப்பை (IDPL லை கொலை செய்து) , பலே வேலை செய்து ,
பயமாயிருக்கப்பா. நம்ம ப்ராண்ட் பேரில் வளரும் நாடுகளுக்கு சப்ளை வேற
செய்யுதாம். யு எஸ், சைனா இரண்டிடமும் ஜாக்கிரதையாகத்தான் இருக்க
வேண்டும்
புதுடில்லி: மக்களின் சாதாரண பயன்பாட்டில் உள்ள பொருட்கள், இயந்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை, சீனாவில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், அத்தியாவசிய, அடிப்படை மருந்து பொருட்களும், அங்கிருந்து தான், கோடிக்கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தொழில்வளம் நிறைந்த அந்த நாட்டின் தயாரிப்புகள், உலகச் சந்தைகளை நிரப்பி வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்புகளை விட, விலை மிகக்குறைவாக இருப்பதால், சீன பொருட்களுக்கு, வளரும் நாடுகளில் ஏராளமான சந்தை வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், உயிரை காக்கும், நோய்களை குணப்படுத்தும் மருந்துகளும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், சீனாவிலிருந்து தான், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.ஒரே நாட்டிலிருந்து, இவ்வளவு அதிக தொகைக்கு, அத்தியாவசிய மருந்துகளுக்கான அடிப்படை மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவது, எதிர்காலத்தில் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தலாம் என, சுகாதார ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
எவ்வளவு: இறக்குமதி? ஆண்டு: அளவு
2011 - 12 :ரூ.8,798 கோடி
2012 - 13 : ரூ.11,000 கோடி
2013 - 14 :ரூ.11,865 கோடி
2014 : ரூ.6,521 கோடி
செப்., வரை தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக