பெண்களின் மதிப்பை காப்பாற்றுவதற்காக நாம் ஒவ்வொருவரும்,
தந்தையாகவும், மகனாகவும் மாற வேண்டும் என்று மாணவர்களுக்கு ஒபாமா
அழைப்புவிடுத்தார்.
டெல்லியில் உள்ள சிரிபோர்ட் என்ற ஆடிட்டோரியத்தில், சுமார் 2000 இந்திய
மாணவ, மாணவிகள் மத்தியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பெண்கள் பற்றி கூறியதாவது:
எனது வாழ்க்கையில், மூன்று சக்தி வாய்ந்த பெண்களால் நான் சூழப்பட்டுள்ளேன்
(மனைவி, இரு மகள்கள்). ஆனால் இந்திய பெண்கள், அனைத்து குடும்பத்தையும்,
தங்கள் குடும்பம் போல நினைத்து பாசம் காட்ட கூடியவர்கள். இந்திய பெண்கள்,
நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களால் சாதித்து காட்ட முடியும்
என்பதை நிரூபித்துள்ளனர்.
பெண்கள் வெற்றிகரமானவர்களாக மாறினால்தான், அந்த நாடு வெற்றிகரமான நாடாக மாற
முடியும். அமெரிக்க அதிபரான நான் ஏதாவது தவறு செய்தால் கூட என் மனைவி
மிட்சேல் அதை எடுத்துச் சொல்ல பயப்பட்டது கிடையாது (இவ்வாறு ஒபாமா
சொன்னபோது அருகே இருந்த மிட்சேல் முகத்தில் அத்தனை வெட்கம்).
பெண்களுக்கு பிரச்சினை என்று வரும்போது, நாம் ஒவ்வொருவரும், தந்தையாகவோ,
மகன்களாகவோ, சகோதரர்களாகவோ உதவ முன்வர வேண்டும். பெண்கள் மதிப்புக்கும்,
மரியாதைக்கும் தகுதியானவர்கள்.
எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு தலைமையேற்றது ஒரு பெண்
அதிகாரிதான் (பூஜா தாக்கூர்) என்பதில் இருந்து, பெண்களின் பலத்தை
புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் இந்தியாவில் அதிகமாக நடப்பதாக
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்தன. இந்த தோற்றத்தை மாற்றுவதற்காக
ஒபாமாவின் அணிவகுப்பு மரியாதைக்கு பெண் அதிகாரி பூஜா தலைமை வகித்தார்.
முப்படையிலுள்ள பெண்கள் பிரிவினரின் அணிவகுப்பு குடியரசு தின விழாவில்
முதல் முறையாக நடத்திக் காண்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக