சென்னை,ஜன.28 (டி.என்.எஸ்) நீராவி முருகனிடம் நகைகளை பறிகொடுத்த ஆசிரியை
வேலம், போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறும் போது, எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த
பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். நீராவி முருகன்
பிடிபட்டது நிம்மதி தருகிறது என்று கூறியுள்ளார்.இச்சம்பவம் பற்றி
ஆசிரியை வேலம் மேலும் கூறும்போது கத்தி முனையில் என்னிடம் செயினை பறித்த
போது எனது உடலெல்லாம் நடுங்கியது. நகைகளையெல்லாம் கழற்றி கொடுத்த பின்னர்,
எனது ஸ்கூட்டியையும் எடுக்க அந்த நபர் (நீராவி முருகன்) முயற்சி செய்தார்.
அப்போது நான் கெஞ்சி கேட்டுக்கொண்டதாலேயே ஸ்கூட்டியை விட்டுச்சென்றார்
என்றார்.நேற்று வேலத்திடம், நீராவி முருகன் செயினை பறித்த
இடத்துக்கு போலீசார் அவனை அழைத்துச்சென்றனர். அப்போது நீராவி முருகன்,
ஆசிரியை வேலத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் chennaionline.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக