டெல்லியை
அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும்
குழந்தைகள் திடீர், திடீரென காணாமல் போயினர். இந்த விஷயத்தில் உத்தரபிரதேச
எந்த அக்கறையும் காட்டவில்லை இதனால் காணாமல் போவோரின் எண்ணிக்கை கூடிக்
கொண்டிருந்தது. 26 வயது இளம்பெண் பாயலும் காணாமல் போக, அவரது தந்தை
ரோஷன்லால் உ.பி உயர் நீதிமன்றம் வரை சென்று, கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர்
29-ல் போலீசாரைத் தட்டி எழுப்பினார்.காணாமல்
போன பாயலின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். சுமார் ஒன்றை
வருடங்களுக்குப் பின் திடீரென அந்த செல்போன் எண் மீண்டும் இயங்கத்
தொடங்கியது.
அதைப் பயன்படுத்திய சுரேந்தர் கோலியை விசாரித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.ஒரு வருடத்துக்கு முன்பே பாயலை கொன்று அந்த பங்களாவில் புதைத்து விட்டதாக போலீசாரிடம் கோலி ஒப்புக் கொண்டான். அவர்களிடம், “அங்கு தோண்டினால் பாயலின் செருப்பு வேண்டுமானால் கிடைக்கலாம்” எனவும் அலட்சியமாகக் கூறியுள்ளான்.
சரி அதையாவது கைப்பற்றி வழக்கை முடிப்போம் என மறுநாள் பங்களாவின் பின்புறம் உள்ள சாக்கடைக் கால்வாயில் தோண்டிய போலீசாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.>அங்கு குவியல், குவியலாக மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கிடைத்தன. அவற்றைப் புல்டோசர் உதவியால் தோண்டி எடுத்த பிறகு பங்களா காம்பவுண்ட் சுவருக்குப் பின் னால் உள்ள காலி நிலத்தில் இருந்த சாக்கடை கால்வாயில் கொலை செய்யப்பட்டவர்களின் துணிமணி கள், செருப்புகள் மற்றும் குழந்தை களின் ஸ்கூல் பேக்குகள், வளையல், காதணிகள் ஆகியவற்றை சிறு பாலிதீன் பைகளில் நிரப்பி போடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக் கப்பட்டது.

இதற்குக்
காரணம் என கோலியின் முதலாளியான 52 வயது மொனிந்தர் சிங் பாந்தரும் கைது
செய்யப்பட்டார். இருவரும் சேர்ந்து 17 இளம்பெண் மற்றும் குழந்தைகளை பாலியல்
பலாத்காரம் செய்து வெட்டிக் கொன்று சாக்கடையில் வீசியதாக 16 வழக்குகள்
பதிவானது. பிறகு இதில், பாந்தருக்கு நேரடி தொடர்பு இல்லை என
விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வேறு சில வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார்.
சதீஷ்
என்ற சுரேந்தர கோலி. தனது எஜமானாரான மொனிந்தர் சிங் பாந்தருக்கு
தெரியாமல், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்ததாக இவர் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து,
கடந்த டிசம்பர் 2006-ல் கோலி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த
காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், கோலிக்கு 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ந்தேதி
தூக்கு தண்டனை விதித்தது.
இந்நிலையில்,
கோலியின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகம்
செய்த பரிந்தரையை கடந்த ஜூலை 27-ல் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, கோலியை தூக்கிலிடுவதற்கான வாரண்ட்டை உபியின் மீரட் மாவட்ட சிறைக்கு காசியாபாத் நீதிமன்றம் பிறப்பித்தது.
சுரேந்தர்
கோலி தனது தண்டனையை எதிர்த்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜனநாயக
உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் தாக்கல் செய்த பொது நல வழக்கு தாக்கல்
செய்தார்.
இந்த
வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர
சூடு, நீதிபதி பி.கே.எஸ்.பாகெல் அடங்கிய பெஞ்ச் கோலியின் தூக்குதண்டனையை
ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக