கொல்கத்தா: முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியை விமர்சித்து செய்தி
வெளி யிட்ட பத்திரிகைகளை அரசு நூலகங்களுக்கு வாங்க மம்தா விதித்திருந்த
தடையை கொல்கத்தா நீதிமன்றம் நீக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு நூலகங்கள் இயங்கி
வருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து
செய்திகளை வெளியிடும் ஆங்கிலம் மற்றும் பிறமொழி பத்திரிகைகள் பலவற்றை இந்த
நூலகங்களில் வைக்க கடந்த ஆண்டு அரசு தடை விதித்தது.
இதை தொடர்ந்து நூலகத்தின் கொள்முதல் பட்டியலில் இருந்து பல பத்திரி கைகளை
நீக்கி மாநில நூலக ஆணைய குழுமம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து
சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனங்கள்.கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தன.
இந்த வழக்கை கொல்கத்தா நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
விசாரணையின் முடிவில், 'நூலக ஆணையக் குழுவின் கொள்முதல் பட்டி யலில்
இருந்து நீக்கப்பட்ட பத்திரிகைகளை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அந்த பத்திரிகைகள் மீண்டும் அரசு நூலகங்களில் இடம்பெற செய்ய வேண்டும்.
இன்னும் 14 நாட்களுக்குள் இந்த உத்தரவை அரசு நடைமுறைப் படுத்தாவிட்டால்,
நீதிமன்றமே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்' என உயர்நீதிமன்ற நீதிபதி
அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக