டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கு
மேலாகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லையே ஏன் என்று சிபிஐ-யிடம்
உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான விசாரணை முடிந்துவிட்டது என்று சிபிஐ தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு என்ன?இந்தியாவைச் சேர்ந்த சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல்
நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் கோரி விண்ணப்பித்தது. அப்போது
தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பல காரணங்களை கூறி உரிமம்
வழங்கவில்லை. பின்னர் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின்
பங்குகள் விற்கப்பட்ட நிலையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது.
இதில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்றாக வேண்டும் என்று அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை மிரட்டினர் என்பது புகார். இதன் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிக்கு சொந்தமான சன் டி.டி.எச்சில் மேக்ஸிஸ் நிறுவனம் பல நூறு கோடி முதலீடு செய்தது என்பதும் குற்றச்சாட்டு. இதனால் தயாநிதி மாறன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்றாக வேண்டும் என்று அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை மிரட்டினர் என்பது புகார். இதன் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிக்கு சொந்தமான சன் டி.டி.எச்சில் மேக்ஸிஸ் நிறுவனம் பல நூறு கோடி முதலீடு செய்தது என்பதும் குற்றச்சாட்டு. இதனால் தயாநிதி மாறன் பதவியை ராஜினாமா செய்தார்.
தாமதம் ஏன்?இந்த வழக்கில் ஓராண்டுக்கு முன்பு எப்.ஐ.ஆர். போடப்பட்டது.
ஆனால் வேறு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில்தான் இன்று
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சிங்வி,
ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது ஆஜரான ஜனதா
கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான
ஏர்செல் வழக்கில் ஓராண்டாக எந்த முன்னேற்றமும் இல்லை என்று
சுட்டிக்காட்டினர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். தாக்கல்
செய்யப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் வழக்கு விசாரணையில் எந்த ஒரு
முன்னேற்றமும் இல்லையே என்று சிபிஐயிடம் கேட்டனர். அதற்கு மலேசியாவில்
ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.
இதை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மலேசியாவில் ஒத்துழைப்பு
கிடைக்காவிட்டால் உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து விசாரணையை நடத்த
வெண்டியதுதானே என்று கேட்டனர். இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைக்காக
அதிகாரிகளை யாரையேனும் சேர்க்க வேண்டியிருந்தால் மத்திய அரசிடம் அனுமதி பெற
2வார கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 1-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக
நீதிபதிகள் தெரிவித்தனர்.விசாரணை முடிந்ததுபின்னர் சிபிஐ தரப்பில் தாக்கல்
செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கில் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மீதான
விசாரணை முடிந்தது. குற்றம் சாட்டப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய
அரசிடம் அனுமதி பெற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக 2 வார காலத்தில் மத்திய அரசை அணுக முடிவு செய்திருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக