மும்பை: போலி என்கவுன்ட்டர் வழக்கில் 13 போலீசார் உட்பட 21 பேருக்கு
மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதி்த்து பரபரப்பான தீர்ப்பு
அளித்துள்ளது.
2006ஆம் ஆண்டு லக்கன் பையா என்பவரை மும்பை போலீசார் என்கவுன்ட்டரில்
சுட்டுக் கொல்லப்பட்டதாக மும்பை போலீசார் அறிவித்தனர். அவர் நிழல் உலக தாதா
சோட்டா ராஜனின் கூட்டாளி என்றும் போலீஸ் சொன்னது.
ஆனால் இது போலி என்கவுன்ட்டர் எனக் கூறி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 5-ந் தேதியன்று 13 போலீசார் உட்பட 21
பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. இன்று தண்டனை அறிவிக்கப்படும்
என்றும் நீதிமன்றம் கூறியது.
இன்று இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கபட்ட 13 போலீசார் உட்பட 21
பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக