கனடா நாட்டிலுள்ள பெரிய நகரான டொராண்டோவில் நேற்று முன்தினம்
வரலாறு காணாத அளவில் மழை கொட்டியது. இதனால் சாலைகள், சுரங்கப்பாதைகளில் வெள்ளம் தேங்கி ரெயில்கள், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல கார்கள் தண்ணீரில் மூழ்கின. சில மாநகர ரெயில்களில் ஜன்னல் அளவிற்கு தண்ணீர் புகுந்ததால் பயணிகள் தவித்தனர். தீயணைப்பு படையினரும், போலீசாரும் சென்று பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த மழைக்கு கால்குரே பகுதியில் 3 பேர் பலியானார்கள். சுமார் 1 லட்சம் மக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினர். மின்சாரம் இன்றி 4 லட்சம் குடும்பங்கள் தவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக