இந்திய-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
அமெரிக்காவில் இந்திய முதலீடு குறித்து, அமெரிக்க - இந்திய வர்த்தக சபை ஆய்வு ஒன்றை நடத்தியது. ‘அமெரிக்காவில் முதலீடு, அமெரிக்காவில் வேலைகளை உருவாக்க இந்தியா எப்படி உதவுகிறது‘ என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவுடனான பரஸ்பர மற்றும் வர்த்தக உறவுகள் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் அடையும் பயன்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்காவில் 11 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) முதலீடு செய்துள்ளதாகவும், இதனால் அமெரிக்காவில் 1 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2000-2010 ஆண்டுகளில் இந்திய முதலீடு 200 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது இது 11 பில்லியனாக அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது..maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக