மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று
திடீரென மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினார்.
மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறிய நிலையில் ஜி.கே.வாசன் உள்ளிட்ட
காங்கிரஸ் தலைவர்களுடன் அழகிரி மட்டும் நெருக்கம் பாராட்டி வந்தார்.
இந்நிலையில் மதுரையில் இன்று காலையில் உத்தரகாண்ட் விமான விபத்தில்
இறந்துபோன பைலட் பிரவீன் வீட்டிற்கு ஆறுதல் சொல்வதற்காக கட்சி
நிர்வாகிகளுடன் மு.க.அழகிரி சென்றார்.
பின்னர் பிரவீன் வீட்டில் இருந்து வெளியே மு.க. அழகிரி புறப்படும்
நேரத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அங்கு வந்தார். இருவரும் பரஸ்பரம்
வணக்கம் செலுத்தினர். பின்னர் 10 நிமிட நேரம் இருவரும் பேசிக்
கொண்டிருந்தனர்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக