அண்ணா ஹசாரே, ஊழலுக்கு எதிரான சில போராட்டங்களை சென்ற ஆண்டு தொடர்ந்து
நடத்தினார். அதன் பின்னணியில் இருந்து, கூட்டங்களை நிர்வகித்து, பணப்
பரிமாற்றத்தைக் கவனித்துக்கொண்டதில் பெரும் பங்கு ஆற்றியவர் அர்விந்த்
கெஜ்ரிவால்/மனீஷ் சிசோதியா ஆகியோர் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
ஜன் லோக்பால் என்ற சட்ட வரைவை முன்வைத்து ஹசாரேயும் கெஜ்ரிவாலும்
போராடினர். பின்னர் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைக் கலைத்துவிட்டு
நான் என் வழி, நீ உன் வழி என்று இருவரும் பிரிந்துவிட்டனர்.
அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார். அண்ணா ஹசாரே வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார். இவிங்க ரெண்டு பேர்வழிகளும் ஓவரா பேசும்போதே ஸ்பெலிங் மிஸ்டேக் ஆவறது உத்துப்பார்த்தால் RSS ஓட்டை நன்னாவே தெரியறது ,,,, http://www.badriseshadri.in/
கடந்த சில தினங்களில் ஹசாரே வாயைத் திறந்தாலே உளறலாகக் கொட்டுகிறது. அவர் பேசாமல் மௌன விரதத்தைக் கடைப்பிடித்தல் நலம் என்று எனக்குத் தோன்றுகிறது. கெஜ்ரிவால் தன் பெயரையோ படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றார் ஹசாரே. கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார். கெஜ்ரிவாலுக்கு அரசியல் ஆசைகள் இருக்கக்கூடாது என்றோ தேர்தலில் நின்று ஊழலுக்கு எதிராகப் போராடக்கூடாது என்றோ ஏன் ஒருவர் எதிர்பார்க்கவேண்டும்? அவரவர்க்கு அவரவர் வழி.
ஹசாரே நேற்று உதிர்த்த முத்தில், ‘நான் பலவற்றையும் வெளியே பேசிவிட முடியாது. பேசினால் பிரச்னை ஆகிவிடும்’ என்று தெரு ஓரத்தில் நின்றுகொண்டு சினிமா கிசுகிசு பேசுபவர்போல் பேசுகிறார். ஊழலுக்கு எதிரானவர்; தைரியமானவர் என்ற பிம்பம் இருக்கும்போது, கெஜ்ரிவால் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் ஹசாரேயிடம் இருந்தால் அதனை வெளியிடுவதுதானே முறை?
எனக்கு கெஜ்ரிவால் கட்சிமேல் பெரும் நம்பிக்கை இல்லை. அரசியலில் அடித்துப் புரட்டி மாற்றம் கொண்டுவந்துவிடுவார்கள் என்று நான் நம்பவில்லை. அரசியல் மாற்றங்கள் நடக்கப் பல பத்தாண்டுகள் தேவை. ஆனால் கெஜ்ரிவால் அவருக்கே உரித்தான அதிரடி முறையில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று நம்புகிறார். அது அவர் இஷ்டம். ஆனால் அவருடைய நேர்மைமீது சந்தேகம் வருவதுபோல் ஆதாரம் இன்றி ஹசாரே பேசுவது அழகல்ல.
[கெஜ்ரிவாலின் “ஸ்வராஜ்” புத்தகம் படித்துவிட்டேன். மிக அருமையாக எழுதியுள்ளார். தன் கட்சியின் அடிப்படைக் கொள்கையை, தான் நம்பும் அரசியல் மாற்றத்தை இப்படிப் புத்தகமாக ஒருவர் கொண்டுவந்திருப்பது மிகவும் பாராட்டக்கூடியது. கிராமத் தன்னாட்சி என்பதை நான் பெருமளவு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், கெஜ்ரிவாலின் இடதுசாரிச் சாயல் எனக்கு ஏற்புடையதல்ல. கெஜ்ரிவாலின் ஸ்வராஜ் புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் பதிப்பிக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். மிக அருமையான தமிழாக்கம் - ஜவர்லால் செய்துள்ளார். புத்தக அட்டையை அடுத்த இரு வாரங்களில் வெளியிடுகிறேன்.]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக