சென்னையில் இன்று கூடும், தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், மத்திய
அமைச்சர் அழகிரி பங்கேற்க முடிவு செ#துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. சமீபத்தில், மதுரையில் ஆவேசம் வெளிப்படுத்திய அழகிரி,
செயற்குழுவிலும் அதை தொடருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., செயற்குழுக் கூட்டம் கருணாநிதி தலைமையில், இன்று காலை, 10:00 மணிக்கு, கூடுகிறது.தமிழகத்தில் நிலவும், 16 மணி நேரம் மின்வெட்டு பிரச்னையை, தீர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தவறிய, மாநில அரசைக் கண்டித்து, மாவட்ட வாரியாக, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டம் அல்லது மனித சங்கிலி பேரணியை நடத்துவது தொடர்பாக, முடிவெடுக்கப்படவுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.http://www.dinamalar.com/
மேலும், காவிரி நீர் பிரச்னை, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை மாநிலத்தில் அனுமதிப்பதை எதிர்ப்பது உள்ளிட்ட, முக்கிய பிரச்னைகள் குறித்தும், அக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தும், கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. சேலம் மாவட்ட, தி.மு.க.,வில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுக்கு, மாவட்ட செயலர் பதவி வழங்காததால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இது குறித்து, செயற்குழுவில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. செயற்குழுக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்பார் என்றும், ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி டில்லியில் இருப்பதால், அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில், மதுரை நிகழ்ச்சியில், அழகிரி ஆவேசமாக பேசியுள்ள நிலையில், செயற்குழுவிலும், அவரது ஆவேசம் எதிரொலிக்கும் என்றும், தென்மாவட்ட நிர்வாகிகளை, மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அவர் முயற்சி எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
-நமது நிருபர்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக