செட்டிகுளம் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த 70 ஆண்டின் பகுதியில் அது
நடந்தது. ஒரு நாள் பிரபாகரன் மைக்கல் அத்துடன் இந்த கதை சொன்ன மூன்றாவது
மனிதரும் இருந்தார். அன்றய தினம் மைக்கலின் பிறந்த நாள்
‘தம்பி, எனது பிறந்த நாள் இன்று. எனது நண்பர் அழைத்திருக்கிறார். நான்
போய்விட்டு ஆறுமணிக்கு முன்பு வந்து விடுவேன்’ என மைக்கேல் பிரபாகரனிடம்
சொன்னார்
‘ஆறுமணிக்கு வந்து விடு. உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.’ என பிரபாகரன் விடைகொடுத்தார்
மாலை ஆறுமணியாகிவிட்டது மைக்கலைக் காணவில்லை .
‘அண்ண , இவன் வரவில்லை. இருண்டுவிட்டது’
‘அவன்ர பிறந்த நாள். கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறான். வந்து விடுவான் என்றார் அந்த மூன்றாவது மனிதர்’
எட்டுமணி. பிரபாகரன் நிலை கொள்ளமல் சுற்றியபடி குட்டி போட்ட நாய் திரிந்தார்
ஓன்பது மணியாகியும் மைக்கேலைக் காணவில்லை. காட்டில் இருள் கவிந்து இப்பொழுது எல்லோரும் கவலைப்படத் தொடங்கினர்கள்
ஓன்பது அரையாகிய போது மைக்கேல் இருட்டை ஊடுறுத்து வந்த போது புதிய சட்டை பாண்டு எல்லாம் போட்டிருந்தார்.
நேரடியாக மூன்றாவது நபரிடம் வந்து ‘அண்ணை எப்படி உடுப்பு இருக்கு’
அந்த நேரத்தில் பிரபாகரன் அங்கு இருக்கவில்லை<
‘நல்லா மாப்பிளை போல் இருக்கு’
‘அண்ணை தலைவர் போல இருக்கெண்டு சொல்லுங்கோ’
‘அழகாகதான் இருக்கு’
‘ஏன்னண்ணை தலைவர் போல இருக்கென்று சொல்ல தயங்கிறீர்கள்.
‘ஓமடா சரி’
அந்தநேரத்தில் வெளியே இருந்த பிரபாகரன் வந்து மைக்கேலிடம் ‘ஏன் தாமதம்?’
முகத்தில் இருந்த கோபம் தெரியவில்லை. இருளாக இருந்தபடியால்
‘அவங்கள் இருந்துவிட்டு போக சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்’
சரி ஒருக்கா பின்னாலே வா
பிரபாகரனை தொடர்ந்து சென்று சிறிது நேரத்தில் இருளில் மூன்று துப்பாக்கி சத்தம் கேட்டது.
மூன்றாவது மனிதர் ஓடி சென்று பார்த்தபோது தலையில் இரத்தம் வடிந்தபடி மைககேல இறந்து கிடந்தார்.
‘ஏன் தம்பி அவனை கொண்டாய் அதுகும் அவனது பிறந்தநாள்—–
‘அவன் சொன்னதை நான் கேட்டேன். அவன் தலைவனாக ஆசைப்படுகிறன். இதை விட்டு
வைத்தால் எனக்கு மடடுமல்ல உங்களுக்கும் பிரச்சனை வரும். இவற்றை ஆரம்பத்திலே
கிள்ளி எறியவேண்டும்.’
இந்த கதையை கேட்டதும் மூச்சை இழுத்து என்னை ஆசுவசப்படுத்திக்கொண்டேன்.
இப்படியான ஒரு மனிதனை தலைவனாக ஏற்று இந்த சமூகம் அவனது புகழ்பாடியதே?.
எத்தனை படித்தவர்கள் அறிவாளிகள் இந்த மனிதரின் பின் சென்றார்கள்..http://www.ilankainet.com/2012/12/3_9.html
நிச்சயமாக இந்த சமூகத்திலும் குறை இருக்கவேண்டும்..
ஏதாவது தருணத்தில் சகமனிதனின் கொலையை நியாயப்படுத்த முடியுமா?
நிச்சயமாக இந்த சமூகத்திலும் குறை இருக்கவேண்டும்..
ஏதாவது தருணத்தில் சகமனிதனின் கொலையை நியாயப்படுத்த முடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக