பத்திரிகையாளர் ஞாநி அவர்களுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கார்.
முக்கியமான அறிவிப்பு இது:தங்கள் நிறுவன ஊழியர்கள் சமூக தளங்களில் கருத்து சொல்லக்
கூடாதென்று ஆனந்த விகடன் குழும நிர்வாகம் அவர்களுக்கு அண்மையில் ஒரு
விதியைப் பிறப்பித்திருப்பதாக் அறிகிறேன். அதன் பின்னர் வழக்கமாக இங்கே
அதிகம் உலவும் சில விகடன் ஆசிரியர் குழுவினர் காணாமல் போய்விட்டார்கள்.
இந்த விதி தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் அத்து மீறல்
என்பதும் இதைப் பிறப்பிக்க விகடன் குழுமத்துக்கு எந்த உரிமையும் அதிகாரமும்
கிடையாது என்பதே என் கருத்து. தங்கள் இதழில் வெளியாகும் விஷயங்களையே இது
பத்திரிகையின் கருத்தல்ல என்று நீதிமனறத்தில் சொல்லி நழுவக்கூடிய
பத்திரிகைகள் , தங்கள் ஊழியர்கள் வலை தளங்களில் சொல்லும் கருத்துகள்
பத்திரிகையின் கருத்துகள் என்று கருதப்பட்டுவிடும் என்று சாக்கு சொல்வது
அபத்தமானது; அநீதியானது. பதுங்கியிருக்கும் அனைத்து விகடன் ஆசிரியர்
குழுவினரையும் திரும்ப வந்து வழக்கம் போல இங்கே இயங்கும்படி வேண்டுகிறேன்.
விகடன் நிர்வாகம் போட்டிருக்கும் விதி நீதிமன்றத்துக்குச் சென்றால்
அடிபட்டுவிடும். அதற்கு அஞ்சவேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக